பேச்சு:சீர்திருத்தத் திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கி.பி 16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கத்தை எதிர்த்து மதச் சீர்திருத்தம் செய்த கிறித்தவர்களை, கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டண்ட்ஸ் (Protestants) என்று அழைத்தனர். “எதிர்ப்பவர்கள்” என்று நாம் இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆனால் அவர்கள் “எதிர்த்தார்கள்” என்பதை விட மதச் சீர்திருத்தம் செய்தார்கள் என்பதே உண்மைப் பொருள். கால வரலாற்றில் இந்தச் சீர்திருத்தம் புரோட்டஸ்தாந்து சீர்திருத்தம் (Protestant Reformation) என்றும் பின்னர் புரோட்டஸ்தாந்து கிறித்தவம் (Protestant Christianity) என்றும் வழங்கப் பெற்றது. இந்தக் கிறித்தவ இயக்கத்தின் அடிப்படை நோக்கம் மதச் சீர்திருத்தம். எனவே இதைத் “திருத்த முறைக் கிறித்தவம்” என்று "A Study of H.A.Krishna Pillai's Work" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதே. இத்தலைப்பிற்கு மாற்றலாமா? அல்லது இத்தலைப்பை வழிமாற்றாகக் கொடுக்கலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:07, 10 மே 2012 (UTC)

தலைப்பு மாற்றுதல் பற்றி எனது கருத்து[தொகு]

தேனி.எம்.சுப்பிரமணி, "Protestant" என்னும் சொல் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பிரிவை/பிரிவுகளைக் குறிக்கலாயிற்று என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் வரலாற்றுப்படி சரியல்ல. கிறித்தவ சபைகளின் தோற்றமும் வளர்ச்சியும் பல வரலாற்றுச் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயம். ஒரு சிறு எடுத்துக்காட்டாக, ஆங்கில விக்கியின் விளக்கத்தைக் காண்க: இங்கே. அங்கே "Protestant" என்னும் சொல் கத்தோலிக்கர்களால் கொடுக்கப்பட்டது அல்ல என்பது விளக்கப்படுகிறது.

மேலும், "Protestant" பிரிவுக்கு உள்ளேயே "Reformed church/es" என்றொரு கிளைப் பிரிவு/கள் உண்டு. காண்க: இங்கே.

இன்னொன்று: பொதுவான கிறித்தவ வழக்குப்படி, "Reformation" என்பதை அதன் மூலச்சொல் அடிப்படையில் "சீர்திருத்த இயக்கம்" என்றும், அந்த இயக்கத்தின் விளைவாகத் தோன்றிய கிறித்தவப் பிரிவுகளை "Protestantism/Protestant Churches" "சீர்திருத்த சபை/சபைகள்" என்றும் கூறுவர்.

மேற்கூறியதிலிருந்து கிறித்தவ சபைப் பிரிவுகளைத் துல்லியமாக வேறுபடுத்திக் காண்பதும், அவை தம்மை அழைக்கும் விதத்தை வரலாற்று உண்மைக்கு ஏற்ப சரியாக விளக்கிக் கூறுவதும் சிக்கலான காரியம் என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம்.

எனவே, தற்சமயத்துக்கு தமிழ் விக்கிக் கட்டுரையின் பெயரை மாற்றவோ, வழிமாற்றல் கொடுக்கவோ தேவை இல்லை என்பது எனது கருத்து. "Reformation" "சீர்திருத்த இயக்கம்" என்றும், "protestantism" "சீர்திருத்த சபை/திருச்சபை" (மாற்றுவழி "புரட்டஸ்தாந்தம்") என்றுமே இருக்கட்டும். "திருத்த முறைக் கிறித்தவம்" என்று புதியதொரு சொற்றொடரை வழிமாற்றாகக் கொடுத்து குழப்பத்தைக் கூட்டவேண்டாம் என்பது எனது கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 13:53, 10 மே 2012 (UTC)