பேச்சு:சீமையகத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீமையகத்தி (சீமை=வெளிநாடு + அகம்=உள்ளே + தீ=தீமை) ?? இவ்விளக்கம் செல்லாது என நினைக்கின்றேன் - குறிப்பாக, அகம் + தீ. நீங்கள் சுட்டும் பொருள் வாராது. அகற்றி என்பது அகத்தி என்று வேண்டுமானால் மாறியிருக்ககூடும். தீமை அகற்றுவதால் அகற்றி-->அகத்தி என்று ஆகியிருக்கலாமோ என நினைக்கிறேன். தெளிவாக, உறுதியாக அறியாததை அருள்கூர்ந்து யாரும் சேர்க்காதீர்கள். --செல்வா 21:35, 13 ஆகஸ்ட் 2009 (UTC)

மறுப்புரை[தொகு]

அனுமானத்தின் அடிப்படையில் எழுதவில்லை. சித்தமருத்துவத்தில் பட்டம்பெற்று, அதன் பிறகு அதிலும் ஆராய்ச்சி செய்து, முனைவர் பெற்ற திரு.அய்யாக்கண்ணு அவர்களிடம் பேசிய பின்னே இதனை எழுதுகிறேன். அவரிடம் நம் விக்கிப்பீடியா பற்றி உரையாடியுள்ளேன். உரையாடலின், சிறு துருவலே இது. அவரது உதவியுடன், சில கட்டுரைகளை தயாரித்து, அதற்குரிய தட்டச்சனாவேன். த* உழவன் 21:49, 13 ஆகஸ்ட் 2009 (UTC)

அவர்க்குரிய மதிப்பை அளித்தே கூறுகிறேன்: அவர் கூறியது கட்டாயம் தவறு. சொற்பொருள் பகுத்துத் தந்தது தவறு. அகம் + தீ என்பது தீமையை அகற்றுவது என்று பொருள் எப்படித்தரும்?--செல்வா 00:13, 14 ஆகஸ்ட் 2009 (UTC)
மேற்கோள் தேவை என்னும் குறிப்பை ஒட்டியிருக்கின்றேன்.--செல்வா 00:39, 14 ஆகஸ்ட் 2009 (UTC)
  • ஆவணப்படுத்த ஆவனச் செய்கிறேன்.த* உழவன் 05:13, 14 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீமையகத்தி&oldid=415693" இலிருந்து மீள்விக்கப்பட்டது