பேச்சு:சமசுகிருதமயமாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது போல் கட்டுரைகள் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு மிகவும் தேவை. கண்டிப்பாக நல்ல குறிப்புகள் வேண்டும். அவையில்லாமல் எழுதுவது வம்புகளை கேட்டு வாங்குவதற்கு சமம். Penawiki 16:27, 25 ஆகஸ்ட் 2008 (UTC)

  • பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம்.
  • இந்திய தத்துவக களஞ்சியம் போன்ற நூல்களின் இதற்கான குறிப்புகள் உண்டு. விரைவில் சேர்க்கிறேன். --Natkeeran 16:42, 25 ஆகஸ்ட் 2008 (UTC)


தலைப்பு சமஸ்கிருதமயமாக்கம் என இருத்தல் வேண்டும். மயூரநாதன் 18:53, 25 ஆகஸ்ட் 2008 (UTC)
சமஸ்கிருதமயமாக்கம் என்பது, சாதிக் கட்டுப்பாட்டுக்கு வெளியிலிருப்பவர்களைச் சாதிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் செயற்பாடு அல்ல. இது சமூகத்தின் கீழ் மட்டங்களில் இருப்பவர்கள், குழுக்களாக, மேல் மட்ட மக்களின் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் உயர்நிலை அடைய முயற்சிப்பதைக் குறிக்கும். பொதுவாக இது முதலில் அதிகாரமும், பண பலமும் இருந்தும் சாதி அடிப்படையிலான அந்தஸ்துக் குறைவாக இருப்பவர்கள் மத்தியிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இது சமூக மேல்நிலையாக்கத்துக்கான ஒரு வழிமுறையாகும். தாழ்த்தப்பட்ட மக்களிடையே காணப்படும் சிறு தெய்வ வழிபாடுகள் படிப்படியாக இந்து சமயத்தின் பெருந்தெய்வ வழிபாடுகளாக மாறிவருகின்றமை இத்தகைய போக்குக்கு எடுத்துக் காட்டுகளாகத் தரப்படுகின்றன. மயூரநாதன் 19:28, 25 ஆகஸ்ட் 2008 (UTC)
அப்படி என்றால் தாழ்தப்பட்டவர்களின் சமய நம்பிக்கைகள், மொழிகள் இழிவானவையா? சிறு தெய்வம்=ஆந்தஸ்து குறைவு, இந்து சமய பெரும் தெய்வம்=அந்ஸ்து உயர்வு. இதை மக்கள் தாமாக ஏற்று கொண்டார்கள் என்று கொள்வது அவ்வளவு பொருந்தவில்லை. மேலும் இது இந்து அமைப்புகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை மழுப்புகின்றது. தமிழர்கள் தாமக விரும்பி மணப்பிரவாள நடையை ஏற்றாளர்கள் என்று கொள்ள முடியுமா? அது ஒரு மேட்டுக்குடி பார்வை. விமர்சனம் அற்ற பார்வை. இருப்பினும் அதையும் கட்டுரையில் தகுந்தவாறு சேர்கலாம்.
"அந்தக் காலத்தில் வளத்தான், சிங்கன், சடையன் என்று பேர் வைத்தார்கள். எங்கள் ஊருக்கு அய்யர் வந்தார். சிங்கனுக்கு கணேஷ் என்றொரு மகனும், முத்துக்கருப்பனுக்கு சோமசுந்தரமும், சோமசுந்தரத்துக்கு பாலசுப்ரமணியனும் பிறந்தார்கள்."
கலாச்சாரம் பாயும் திசை --Natkeeran 19:47, 25 ஆகஸ்ட் 2008 (UTC)
நக்கீரன், நான் இங்கே இழிந்தது, உயர்ந்தது என்று எதையும் சொல்லவரவில்லை. சமஸ்கிருதமயமாக்கம் என்னும் கருத்துருவின் வரைவிலக்கணம் இதுதான். நீங்கள் மேலே கொடுத்துள்ள மேற்கோளும் இதைத்தான் காட்டுகிறது. முத்துக்கருப்பன் தனது மகனுக்குச் சோமசுந்தரம் என்று பெயர்வைக்கவேண்டும் என்று எவரும் வற்புறுத்துவதில்லை என்பதைக் கவனிக்கவும். இதுகுறித்து சிவத்தம்பி பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்னமார் வழிபாடு என்னும் கட்டுரையில் என். சண்முகலிங்கன் கூறுவதைக் கீழே தருகிறேன்.
......முதன் முதலில் ஐம்பதுகளின் முற்கூறில் சமணந்துறையில் நிகழ்ந்த சமஸ்கிருதமயமாக்கலிடை மூலவராகப் பிள்ளையார் இடம்பிடிக்க, அண்ணமார் சூலம் அதனை வழிபடுவோரை ஒத்த நிலையில் வெளிவீதிக்குத் தள்ளப்பட்டது.
- மயூரநாதன் 20:04, 25 ஆகஸ்ட் 2008 (UTC)
அந்த சமூக சூழ்நிலையை ஏற்படுத்தியதைப் பற்றித்தான் நாம் குறிப்பிட வேண்டும். யார் ஏற்படுத்தினார்கள்? ஏன் ஏற்படுத்தினார்கள்? முத்துக்கருப்பன் தனது மகனுக்கு ஏன் சோமசுந்தரம் என்று பெயர்வைக்க தள்ளப்பட்டன் என்றும் பார்க்க வேண்டும். இது காலினித்துவத்தை விரும்பி ஏற்ற இலங்கை தமிழ் மக்கள் தமது மகளுக்கு எலிசபத் என்று பெயர் வைத்தார்கள் என்று சொல்வது போல இருக்கிறது. சமஸ்கிரத கலைச்சொற்களை தமிழில் பயனபடுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை நாம் விரும்பி ஏற்றது என்று சொல்ல முடியுமா?


நீங்கள் சொல்ல முனைவது தெரிகிறது. அதாவது தரம் என்று மதிக்கப்படுவதை தாமும் பார்த்து செய்து தாம் அந்த தரத்தை அடைந்து, அதில் கிடைக்கும் பயன்களைப் பெறும் முயற்சி. சரியா. --Natkeeran 20:31, 25 ஆகஸ்ட் 2008 (UTC)
மேலும் கீழே பாருங்கள் சில மேற்கோள்கள் தருகிறேன்.
சிவத்தம்பியின் யாழ்ப்பாணத்து இந்து மக்களிடையே சமூக மேனிலைப்பாட்டு அசைவியக்கமும் வழிபாடும் என்னும் கட்டுரையிலிருந்து:
அக் கொள்கையின் அடிப்படை இதுதான். இந்தியச் சூழலில் மேனிலைப்பட்ட அசைவியக்கங்களுக்கு உள்ளாகும் ஒருவர் அன்றேல் குழுமம், தம் மத முறைமைகளைப் படிப்படியாக உயர் இந்துமத நெறியில் கூறப்படுகின்ற அதாவது சமஸ்கிருத எழுத்துக்களில் உள்ளதென நம்பப்படுகின்ற, முறைமையில் அமைத்துக் கொள்கிறார்/றது. இப்படிச் சொல்கின்ற பொழுது தாம் இதுவரை கடைப்பிடிக்காச் சடங்குகள், நடைமுறைகளைக் கடைப்பிடித்து, அதே வேளையில் தாம் இதுவரை கடைப்பிடித்து வந்தனவற்றை சமஸ்கிருத நிலைப்படுத்தி அவற்றையும் உயர்மரபுக்கு உரியன போன்று போற்றுதல் மரபாகும்.
யாழ்ப்பாணத்துச் சமஸ்கிருத நெறிப்படுகையின் இன்னொரு வெளிப்பாடாக அமைவது சிறு பாரம்பரியத் தெய்வங்கள் பெரும் பாரம்பரியத் தெய்வங்களாகப் போற்றப்படுவதாகும். இதற்கு நல்ல உதாரணங்களாக அமைபவை அம்மன் கோயில்களே. முன்னர் கண்ணகை அம்மன் கோயில்களாக இருந்த பல கோயில்கள் இப்பொழுது உயர் பாரம்பரியக் கடவுளரின் பெயர்களைக் கொண்ட கோயில்களாகவுள்ளன.
இதிலே புத்தூர் கிழக்குக் கண்ணகை அம்மன் இராஜராஜேஸ்வரியாக மாறியது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்:
சிறு பாரம்பரியத் தெய்வங்கள் உயர் மரபுத் தெய்வங்களாகக் கொள்வது ஒருபுறமிருக்க முன்னர் குறிப்பிட்டபடி, சிறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளும் (பொங்கல், குளிர்த்தி) உயர் வழிபாட்டு முறைகள் ஆகக் கொள்ளப்படுவதை நோக்கத் தவறக்கூடாது.
- மயூரநாதன் 20:04, 25 ஆகஸ்ட் 2008 (UTC)


வரைவிலக்கணம்[தொகு]

நன்றி. விளங்குகிறது. ஆனால் சூழலை விளக்கியே வரைவிலக்கணம் முன்வைக்கப்பட வேண்டும். அதாவது சமஸ்கிருதமயமாக்கம் புத்தூர் கிழக்குக் கண்ணகை அம்மன் இராஜராஜேஸ்வரியாக மாறிய செயற்பாட்டைக் குறிக்கின்றது. ஆனால் அது விரும்பி ஏற்கப்பட்டது என்று சொல்ல முடியாது. இப்படி சொல்லாம்:

சமஸ்கிருதமயமாக்கம் சமூகத்தின் கீழ் மட்டங்களில் இருப்பவர்கள், குழுக்களாக, சமூக சூழ்நிலைகளால் அதிகாரமும் செல்வாக்கும் செலுத்திய சமஸ்கிரத நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் தமது நிலையை இணையாக நிலைநிறுத்த முயற்சிப்பதைக் குறிக்கும். அதே வேளை சமஸ்கிரத பண்பாட்டை பரப்ப முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளையும் குறிக்கும்.

--Natkeeran 20:49, 25 ஆகஸ்ட் 2008 (UTC)

நவீன மெக்காலேக்களும் நகலெடுப்பு இயந்திரங்களும், நவீன மெக்காலேக்கள்: சமூக நீதி எதிர்ப்பு அரசியல்--ரவி 21:17, 25 ஆகஸ்ட் 2008 (UTC)

நல்ல இணைப்பு ரவி. நற்கீரன், சமஸ்கிருதமயமாக்கம் என்பது ஒரு அடையாளம் காணப்பட்ட சமூகப் போக்குக்கு வைக்கப்பட்ட பெயர் இதில் அதிகம் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. சமஸ்கிருதமயமாக்கம் என்றால் இதுதான் என்று இணங்கிப் பலரும் எழுதி வைத்திருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்துத்தான் நாம் பேசலாம். ஒரு காலத்தில் இதனை சமஸ்கிருதமயமாக்கம் என்று குறிக்காமல் பிராமணமயமாக்கம் என்று சொல்லவேண்டும் என்றும் கருத்து இருந்ததாகத் தெரிகிறது ஆனால் காலப்போக்கில் தற்போதுள்ள சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டது. நீங்கள் சொல்வது சரியாக இல்லை என்று நான் சொல்லவரவில்லை. அதில் உண்மை உண்டு. ஆனால், சமஸ்கிருதமயமாக்கம் என்ற சொல் குறிப்பது அதையல்ல என்றுதான் சொல்கிறேன். மயூரநாதன் 03:18, 26 ஆகஸ்ட் 2008 (UTC)
மயூரநாதன், தற்போது இருக்கும் வரையறை சரியா? இந்த சொல் பல வழிகளில் பயன்பட்டு இருக்கிறது. ரவி சுட்டிய கட்டுரையில் நான் முதலிக் கூறவந்தற்கு இணங்க பயன்பட்டிருப்பதைக் காணலாம். --Natkeeran 13:04, 26 ஆகஸ்ட் 2008 (UTC)
ரவி கொடுத்த இணைப்பில் இருக்கும் பின்வரும் பகுதியைப் பாருங்கள்:
எம். என். ஸ்ரீனிவாஸ் என்ற இந்திய சமூகவியலாளர் அவர் அறிமுகப்படுத்திய சமஸ்கிருதமயமாக்கல் என்ற சொல்லுக்காக அறியப்படுகிறார். இந்திய சாதி அடுக்கில் கீழே இருக்கும் பிரிவினர் மேலே இருப்போரின் கலாச்சாரத்தையும், சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் நகலெடுப்பதின் மூலம் தங்கள் சமூக நிலையை உயர்த்திக்கொள்ள முயலும் போக்கே சமஸ்கிருதமயமாக்கல் எனக் குறிக்கப்படுகிறது.
இது தான் சமஸ்கிருதமயமாக்கம் என்பதன் பொருள். இது ஏன் நடைபெறுகிறது என்பது வேறு விடயம். ஆனால் சமஸ்கிருதமயமாக்கம் என்பது என்ன என்றால் அதன் வரைவிலக்கணம் இதுதான். இது எப்படி நடக்கிறது என்று பார்த்தால் கூட இங்கே திணிப்பு என்று எதுவும் இருப்பதில்லை. திணிப்பு என்று வந்தால் அது சமஸ்கிருதமயமாக்கல் ஆகாது. நாங்கள் இன்று 50% ஆங்கிலம் கலந்து பேசுகிறோம் என்றால் அது வெள்ளைக்காரன் திணித்ததால் அல்ல. அவர்கள் எங்களை விட்டுப்போய் 60 ஆண்டுகள் ஆனாலும் நாங்கள் தான் அவர்களையும் அவர்கள் பண்பாடுகளையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். இதே போல்தான் சமூக அமைப்பு ஒன்றில் உயர்வு என்று கருதப்படுவதை நோக்கி மக்கள் போக விரும்புகிறார்கள். அதன்மூலம் சாதிய அடையாளங்களிலிருந்து விடுபட அவர்கள் விரும்புகிறார்கள் எனலாம். உண்மையில் சமஸ்கிருதமயமாக்கத்தின் அடிப்படையில் உள்ளது சாதிக் கட்டுக்கோப்புக்களில் இருந்து வெளிவருவதற்கான ஒரு முயற்சியே அன்றி நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் சாதிக் கட்டுப்பாட்டுக்குள் மக்களைக் கொண்டுவருவதற்கான முயற்சி அல்ல. கீழே தரப்பட்டுள்ள சிவத்தம்பியின் கூற்று. சமஸ்கிருதமயமாக்கத்தின் நோக்கமும், உந்து சக்தியும் சாதியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் என்னும் கருத்துக்கு நேர் எதிரானது என்பதைக் காட்டுகிறது:
இந்த சமஸ்கிருத நெறிப்படுகையின் சமூக உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ளல் அவசியம். ஒரு புறத்தே நோக்கும்பொழுது ஒருவகைப்பட்ட சமய சனநாயகத்தை இப் பண்பு குறிக்குமதே வேளையில், இப்பண்பு இதற்கு முன்னர் சமூகச் செல்வாக்கற்றிருந்த குழுமங்கள் இப்பொழுது சமூகச் செல்வாக்குடையனவாக மேற்கிளம்பியுள்ளன என்பதையும் காட்டுகிறது. வெளிநாட்டுப் பிழைப்பினால் கிடைக்கும் பணவருவாய் சமூகத்தில் சகல மட்டங்களிலும் பரவியுள்ள இன்று இந்த வளர்ச்சி காணப்படுவது இயல்பே. ............................. பண்பாட்டில் பங்குகொள்ளும் உத்வேகமும் உயர் பண்பாடு என் கருதப்படுவதைத் தம்வயப்படுத்திக் கொள்ளும் ஆர்வமும் இதற்கு ஆதார சுருதியாக அமைகின்றது.
- மயூரநாதன் 19:22, 26 ஆகஸ்ட் 2008 (UTC)


மயூரதாதன் நான் நீங்கள் கூறியவற்றையும் உள்வாங்கியே கீழ்வரும் வரையறை எழுதினேன். இது திணிப்பா இல்லையா என்பது முக்கிய ஒரு விடயம். ஆங்கிலேயர்கள் எம்மை நிர்பந்திருக்காவிட்டால் நாம் ஆங்கிலத்தை ஏற்றுருக்க வேண்டி இருந்திராது. எப்படி நிர்பந்திதார்கள். கல்வியால், வேலை வாய்ப்பால். அப்படி நிர்பந்தித்து நாம் பழகின பிறகு அதை இந்திக்கு, சிங்களத்துக்கு பதில் தேர்ந்தோம். உலகம் எல்லாம் ஆங்கிலம் தானக பரவவில்லை, அதிகாரத்தால் பரவியது. அதிகாரம் தனது பண்புகளை நிலைநாட்ட முனையும், அது இயல்பு.


சமஸ்கிருதமயமாக்கம் சமூகத்தின் கீழ் மட்டங்களில் இருப்பவர்கள், குழுக்களாக, சமூக சூழ்நிலைகளால் அதிகாரமும் செல்வாக்கும் செலுத்திய சமஸ்கிரத நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் தமது நிலையை இணையாக நிலைநிறுத்த முயற்சிப்பதைக் குறிக்கும். அதே வேளை சமஸ்கிரத பண்பாட்டை பரப்ப முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளையும் குறிக்கும்.

--Natkeeran 19:54, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

இல்லை நக்கீரன், சமஸ்கிருத பண்பாட்டைப் பரப்ப முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் சமஸ்கிருதமயமாக்கல் என்னும் கருத்துருவுக்குள் அடங்குவது இல்லை. இது முழுவதுமாக வேறுபட்ட ஒரு கருத்துரு. இங்கே நாங்கள் இருவரும் இணங்கிக் கொண்டு ஒரு வரையறையை எழுதவேண்டும் என்பதில்லை. நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் அவை சமஸ்கிருதமயமாக்கம் என்னும் கருத்தாக்கத்துள் அடங்குவன அல்ல என்பதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். சமுதாயத்தில் காணப்பட்ட ஒரு போக்குக்கு, அதாவது தாங்கள் உயர்வாகக் கருதும் ஒன்றை நோக்கி மக்கள் உயர முயற்சிக்கும் ஒரு போக்குக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு வேறு வரைவிலக்கணம் கொடுக்கவேண்டியதில்லை. நீங்கள் கூறுவது வேறொரு விடயம் அதற்கு நாம் வேறு பெயர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமே ஒழிய சமஸ்கிருதமயமாக்கம் என்னும் கருத்துருவுக்குள் உள்ளடக்க முயலக்கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு.
Chair என்பதை நாற்காலி என்கிறோம். நான்கு கால்கள் இருப்பதைப் பார்த்து அதனை நாற்காலி எனப் பெயர் கொடுத்தார்கள். எனவே Chair என்ற பொருளை எல்லோரும் ஒன்றுபோலப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாற்காலி என்றால் Chair என்பதை ஏற்றுக் கொண்டால்தான் முடியும். அதைவிடுத்து நாய் போன்ற விலங்குகளுக்கும் நான்குகால்கள் இருப்பதால், நாற்காலி என்பது நாய்கள் போன்ற நாலுகால் விலங்குகளையும், Chair ஐயும் குறிக்கும் என வரைவிலக்கணம் கூற முயன்றால் நாற்காலி என்ற சொல்லின் அடிப்படைக் கருத்துரு இல்லாமல் போய்விடுகிறது. எனவே ஏற்கெனவே இணங்கிக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணங்களை அப்படியே பயன்படுத்துவதுதான் சரி (விக்கிப்பீடியாவிலாவது). இதுதான் குறிப்பிட்ட சொல்லின் சரியான விளக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ள உள்ள ஒரேவழி.

மயூரநாதன் 20:28, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

உங்கள் பெறுமைக்கு நன்றி. இது established கருத்துரு என்பது தெரிகிறது. நான் சுட்ட முயன்ற கருத்துரு பரப்ப மேற்பட்ட செயற்பாடுகளையே. அந்த கருத்துருவுக்கு என்ன பெயர்? இந்த அலசலை இத்தோடு நிறுத்துகிறேன். --Natkeeran 20:47, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

புரிதல்++ நோக்கி சில கருத்துகள் :)

  • பெயர் சமசுகிருதமயமாக்கம் என்றிருந்தாலும், தற்கால சமூகத்தில் எல்லாரும் சமசுகிருதத்துக்குத் தொடர்பே இன்றி ஆங்கிலம் கற்று, நவநாகரிக உடை உடுத்தி, மேட்டுக்குடி கலைகள் கற்றுக் கொண்டாலும், அதற்குப் பெயரும் சமசுகிருதமயமாக்கம் தான்.
  • சமசுகிருதம் / ஆங்கிலத்தை உண்மையில் எவ்வகையில் பரப்ப முயன்றார்கள் என்பது நோக்குக்குரியது. மத மாற்றம் போல் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மிரட்டியோ வேறு வழிகளிலோ எல்லாரையும் மாற்றவில்லை. உண்மையில், இம்மொழிகள், இம்மொழி பேசுவோருக்கு உரிய சலுகைகள், சமூகத் தகுதி நிலையை பரவ விடாமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைக்கும் நிலையே இருந்தது. எல்லோராலும் ஆங்கிலம் / வட மொழி கற்க முடியவில்லை / எல்லாரும் கற்கவில்லை / கற்க விடவில்லை என்பதையும் கவனிக்கலாம். தற்காலத்தில் ஆங்கிலம் மேட்டுக்குடி மொழியாக இருந்தாலும் யாரும் அதை வலுக்கட்டாயமாக கற்பிக்கவில்லை. மாறாக, தரமான ஆங்கில வழிக்கல்விக்குப் பெரும் கட்டணம் இருப்பதால் அது ஒரு வட்டத்துக்குள்ளேயே வைக்கப்படுகிறது. ஆனால், யாரும் கட்டாயப்படுத்தாமல், எப்பாடு பட்டாவது மேட்டுக்குடியினரின் தகுதி நிலைக்கு காரணமானவற்றை நாமும் செய்து அவர்களைப் போல் பேசப் பழக வேண்டும் என தானான ஏக்கம் / தாழ்வு மனப்பான்மை வரும் போக்கையே சமசுகிருதமயமாக்கம் என்கிறோம்
  • ஒரு எளிய எடுத்துக்காட்டு - 1980க்குப் பிறகு பிறந்த என்னுடைய மூன்று நண்பர்கள். வெவ்வேறு குடும்பங்கள். ஊர்கள். இடைநிலைச் சாதியினர். மூவரின் தந்தைகளும் முதல் தலைமுறை அரசு அலுவலர்கள். மூவருமே தங்கள் அப்பா - அம்மாவை mummy daddy என்றே அழைக்கப்பழகப்பட்டார்கள். இந்த mummy-daddy வழக்கம் சமூகத்தின் மிக அடித்தட்டு வரைக்கும் பாய்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால், இப்படி mummy-daddy என்று அழைக்கச் சொல்லி யாரும் திட்டமிட்ட பரப்புரை செய்யவில்லை--ரவி 00:35, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

உங்கள் புரிதல் சரிதான் ரவி. உண்மையில் சமஸ்கிருதமயமாக்கம் என்னும் சொல்லில் சமஸ்கிருதம் என்னும் மொழிப்பெயர் இருந்தாலும் சமஸ்கிருதத்துக்கு இதில் நேரடியான தொடர்பு கிடையாது நீங்கள் எடுத்துக் காட்டியதுபோல் மேலை நாட்டுப் பழக்கவழக்கங்களை நகலெடுத்து உயர முயல்தல் கூட சமஸ்கிருதமயமாக்கல் எனப்படுகிறது. பக்தவச்சல பாரதி, Sanskritization என்பதற்கு 'உயர்குடியாக்கம் என்னும் தமிழ்ச் சொல்லைக் கையாளுகிறார்.

சமஸ்கிருதமயமாக்கம் என்பது பண்பாட்டு மாற்றத்துக்கான பொறிமுறையின் ஒரு வகை எனலாம். பண்பாட்டு மாற்றங்கள் பல வகையில் நிகழ்கின்றன. இவற்றில் பரவல், பண்பாட்டுப் பேறு, ஓரினமாதல், பண்பாட்டுவயமாக்கம், நவீனமயமாதல், தொழில்மயமாதல், நகரமயமாதல், புரட்சி, மேற்கத்தியமயமாதல், சமஸ்கிருதமயமாக்கம், ஊரகமயமாதல், உழவராதல், பழங்குடித்தமையிலிருந்து விடுபடல், மீளப்பழங்குடியாதல் போன்ற பல கருத்துருக்கள் உள்ளன. இவற்றுட் சில திணிக்கப்படுபவை, சில விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுபவை, சில தானாகவே நிகழ்பவை. மயூரநாதன் 02:51, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

சமஸ்கிரததிணிப்பு, சிங்களமயமாக்கம், அமெரிக்கமயமாக்கம், ஐரோப்பியமயமாக்கம்[தொகு]

  • கீழ் நிலையில் இருந்த தமிழர்கள், இயக்கர்கள், நாகர்கள் ஆகியோர் உயர் அந்தஸ்து பெற்ற சிங்கள பண்பாட்டை பிரதி செய்து தம்மை உயர்த்தி கொள்ள பார்த்தா செயற்பாட்டை சிங்களமயாக்கம் எனலாம்.
  • இராக்கிய மக்கள் தம்மை விடுவித்த அமெரிக்கர்களின் உயர்ந்த பண்பாடை பிரதி செய்து தம்மை உயர்வித்து கொண்ட நடைமுறையை அமெரிக்கமயமாக்கம் எனலாம்.
  • அமெரிக்க பழங்குடிகள் மொழியை மாற்றி, நம்பிக்கைகளை மாற்றி, பண்பாட்டை மாற்றி கட்டியா பாடசாலைகள் மிசனரி நடவடிக்கைகளை பயன்படுத்தி உயர்ந்த ஐரோப்பிய பண்பாட்டை பிரதி செய்து தம்மை உயர்த்தி கொண்டதை ஐரோப்பியமயமாக்கம் எனலாம்.

பண்பாட்டு மாற்றம் பல முறைகளில் நிகழலாம் என்பது உண்மை. ஆனால் அதிகாரத்தின் மூலம் திணிக்கப்படுவதை சாதரணமாக எடுத்துக்கொள்வது தவறு. --Natkeeran 13:46, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

நற்கீரன், இந்த மயங்களின் துவக்கப்புள்ளியான அதிகாரத்தை யாரும் சரி என்று சொல்லவில்லை. ஆனால், அந்தச் செயல்பாட்டுக்கு வேறு சொல்லால் குறிக்க வேண்டுமோ என்பதே கேள்வி. எடுத்துக் கொண்ட சொல்லுக்கான வரையறை குறித்து மட்டும் தானே பேசுகிறோம்?--ரவி 15:13, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

அந்த சொல் என்ன? --Natkeeran 15:38, 27 ஆகஸ்ட் 2008 (UTC)
  • சமசுகிருதவயப்படல், சமசுகிரதவசப்படல், சமசுகிரதவசமாதல், சமசுகிருதமயமாதல், இச்சொற்களில் ஏதேனும் ஒன்று பொருத்தமாக இருக்குமா எனப் பாருங்கள். --HK Arun