பேச்சு:சபினா பார்க் அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைதானம் என்பதற்கு பதில் திடல் என்று சொல்லலாமே? இல்லை, விளையாட்டுத் திடல் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்குமா?--ரவி 13:49, 31 மார்ச் 2007 (UTC)

சபினா பார்க் துடுப்பாட்டத் திடல் என்று பெயர் மாற்றிவிட்டால் தெளிவாகவும் தமிழாகவும் இருக்கும்--ரவி 13:52, 31 மார்ச் 2007 (UTC)

திடல் என்பது pitch என்பதற்கு பொருத்தமாக இருக்கும். (ஒரு சொல் தேடிக்கிட்டுருந்தேன்)  மைதானம் எனும் போது திடல், பார்வையாளர் அரங்கு போன்றைவ அனைத்தையும் அடக்குவதாக கொள்ளலாமா?--டெரன்ஸ் \பேச்சு 14:05, 31 மார்ச் 2007 (UTC)

மைதானமும் விளையாட்டுத் திடலைத் தான் குறிக்கும். அரங்கத்தைக் குறிக்காது. அரங்கம் திடலை உள்ளடக்கிய சொல். ஆனால், players are on the field என்பதை திடல், மைதானம் என்பதைக் கொண்டு மட்டும் தான் குறிப்பிட முடியும். pitchக்குத் திடல் பொருந்தாது. கீழ் வரும் இராம.கி அவர்களின் கிரிக்கெட் குறித்த இந்தக் கட்டுரையில் பல சொற்கள் சிக்கும். படித்துப் பாருங்கள். --ரவி 14:22, 31 மார்ச் 2007 (UTC)