உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கேரளக் காவல்துறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@SURESH M KANTHALORE: இங்கு Police என்பது காவற்றுறையைக் குறிக்கிறது. கேரளக் காவற்றுறை அல்லது கேரளக் காவல் துறை என்ற தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்துவது பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 16:11, 13 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

கேரளக் காவல்

[தொகு]

@பயனர்:மதனாஹரன் கட்டுரையில் கேரளக் காவல் என்பது Kerala Police-யும், கேரளக் காவல் துறை என்பது Kerala Police Department-யும் குறிக்கும்.கேரளக் காவல் என்பது, கேரள உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளள கேரளக் காவல் துறை அதாவது Kerala Police Department-ன் அதிகாரத்தில் வரும் ஒரு முகமையாகும். ஆகையால் கேரளக் காவல் என்பதனை கேரளக் காவற்துறை என மாற்றுவது சரி அல்ல. வேண்டும் என்றால் கேரளக் காவல்துறை என்ற புதியக் கட்டுரையை Kerala Police Department-காக தொடங்கலாம். Tamilnadu Police என்றக் ஆங்கிலக் கட்டுரைக்கான தமிழ் கட்டுரையில் தமிழ்நாடு காவற்துறை என்றத் தலைப்புத் தரப்பட்டுள்ளது, ஆனால் உள்ளே தமிழ்நாடு காவல் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. துறை என்பதும் முகமை என்பதும் இருவேறு சொற்களாகும். இக்கட்டுரை ஓர் அரசு முகமை அதாவது Agency -யை பற்றியதாகும், அல்லாது ஒரு துறை அதாவது Department-ஐ பற்றியதல்ல. ஆகையால் தலைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டாம். இக்கட்டுரை கேரள மாநிலத்தில் வாழும் தமிழ் மொழி சிறுபான்மையினர் தங்கள் மாநிலத்தின் அரசுச் சார்ந்த துறைகள், முகமைகள், கழகங்கள் பற்றி தங்கள் தாய் மொழியிலேயே அறிந்துக் கொள்ள விக்கிபிடியாவின் இது போன்ற கட்டுரைகள் உதவும் என்பதன் காரணத்தால் இக்கட்டுரையை எழுத துடங்கியுள்ளேன். தங்களின் கருத்திற்கு நன்றி. SURESH M KANTHALORE (பேச்சு) 10:38, 14 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கேரளக்_காவல்துறை&oldid=3757275" இலிருந்து மீள்விக்கப்பட்டது