பேச்சு:குருவித்துறை சுயம்பு குரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உலகிலேயே சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய ஒரே ஒரு நட்சத்திர கோவில் உலகிலேயே சுயம்பு தவக்கோல குரு அமைந்துள்ள ஒரே திருத்தலம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட கோவில்.

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் சோழவந்தான் வழி குருவித்துறை 625 214 மதுரை மாவட்டம்.


முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்டு போன அசுரர்களை எல்லாம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மருதசஞ் சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெற செய்து காப்பாற்றி வந்தார். அந்த மந்திரத்தை கற்று கொள்ள விரும்பிய தேவர்கள் வியாழ பகவானின் (குரு) மகன் கசனை அழைத்து உனது தியாகத்தால் தான் அசுரர்களை வெல்ல முடியும். எனவே நீ அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று குருகுல வாசம் செய்து மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வர வேண்டும் என்றார்கள். தேவர்கள் கூறியது போலவே கசனும் தன் தந்தை வியாழபகவானிடம் நான் திரும்பி வரும் போது பிரம்மச்சாரியாகத்தான் வருவேன் என்று சபதம் செய்து விட்டு அவரது ஆசியுடன் அசுரகுருவிடம் சென்றான். அசுரலோகம் சென்ற அவன் சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையெல்லாம் கண்காணித்து வந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து கசனை கொன்று விட தீர்மானித்தார்கள். அதன்படி கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுர குரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அசுர குருவும் ஏதும் அறியாமல் குடித்து விட்டார். கசனை காணாத தேவயாணி தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுர குருவும் தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து தன் மகளை தேற்றினார். தேவயாணியின் விருப்பப்படி மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர் பெற்று வந்த கசன் தன் உயிரைக்காப்பாற்றிய அசுர குரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுர குருவை உயிர் பெறச் செய்தான். அசுர குரு உயிர் பெற்றவுடன் குருவே நான் வந்த காரியம் முடிந்து விட்டது எனக்கு விடை தாருங்கள். நான் செல்ல வேண்டும் என்று கூறினான். சுக்கிராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற அதற்கு கசன் தன் தந்தையிடம் பிரம்மசாரியாக திரும்பி வருவதாக சத்தியம் செய்திருப்பதாகவும் மேலும் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் தேவயாணி எனக்கு சகோதரி முறை வேண்டும் என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். தேவயாணி எவ்வளவு தடுத்தும் பயனில்லாமல் போகவே கடும் கோபம் கொண்ட அவள் தன் இஷ்ட தேவதைகளை பிரார்த்தித்து கசனை சப்த மலைகளாலும் தடுத்து நிறுத்தி தேவலோகம் செல்ல முடியாமல் அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத குரு மகனை மீட்டுத்தரும் படி இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள் சக்கரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பெருமாள் குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமி) சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் இவர் சித்திரரத வல்லபபெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான் சக்கரத்தாழ் வாருடன் இருக்கிறார். இவர்களுக்கு முன்புறம் சுயம்பு வடிவ சிலைகள் உள்ளன. சுயம்பு மற்றும் பிரதிஷ்டை மூர்த்திகளை ஒரே இடத்தில் காண்பது அபூர்வமான விஷயம்.

நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலாகும். உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. 12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கண்ணைக் கலங்க வைத்த நிகழ்வு : முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆலயத்தில் பணியாற்றிய ஸ்ரீ ஸ்ரீ ரங்கா ராஜா பட்டர் வறுமையில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஸ்ரீ விஷ்ணு அவரது கனவில் தோன்றி தேரில் இருந்து அவனை பார்த்து சிரித்தார் அடுத்த நாள் காலையில் பட்டர் மகிழ்ச்சியில் நிறைந்தார். அந்த நாளில் முதல் பட்டர் தனது சிறிய பணத்தை கூட அவர் கோவிலில் செலவு செய்தார். அவர் கோவிலில் தொடர்பாக பல கடிதங்கள் எழுதியுள்ளார். ஆனால் அரசாங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியரு அவரது கடிதங்கள் ஏற்று கொள்ள வில்லை. ஒரே காரணம் பணம் இல்லாததால் இறுதியாக அவர் மிக சில ஆண்டுகளில் காலமானார் அவரது காலத்திற்கு பிறகு இப்போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்ய முடிவு செய்ப்பட்டது