பேச்சு:காலற்றிறன்
Appearance
வெப்பத்தை அல்லது கதிராற்றலை வெளிவிடும் தன்மையை (emissivity உமிழ்மை?, வெளிவிடுமை, வெளியுமிழ்மை) ஏன் காலற்றிறன் எனக் கூறப்படுகின்றது என்பதை பொருள் விளங்குமாறு கூறுதல் வேண்டும் என நினைக்கின்றேன். திறன் என்பதைப் பலரும் உணர்வர். ஆனால் காலற்றிறன் என்பதை புரிந்துகொள்வார்களா? இதன் பொருள் முதலில் எனக்கு விளங்கவில்லை. காலல் என்றால் கக்குதல், வெளிவிடுதல் என்று பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இட்ட பெயர் என்றால் பிறைக்குறிகளுக்குள் காலல் = வெளிவிடுதல், என்று குறித்தல் நல்லது என்று நினைக்கின்றேன். கால் என்றால் கறுப்பு, கருநிறம் என்றும் பொருள் உண்டு. இதனாலும் இதன் பொருள் சிறப்பு கொள்ளக்கூடும். --செல்வா 20:13, 7 திசம்பர் 2010 (UTC)