பேச்சு:கரடிப் பேரேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பைக் கரடிப் பேரேரி என மாற்றலாம் என நினைக்கிறேன். கிரேட் என்பது அனைத்துலகப் பெயர் வழக்கு அல்ல.--செல்வா 17:42, 26 பெப்ரவரி 2008 (UTC)

எசுப்பானிய மொழியில் இக்கட்டுரை Gran Lago del Oso என்றும் 'டாய்ட்ச் மொழியில் Großer Bärensee என்றும் ஒவ்வொரு மொழியிலும் அவரவர்கள் மொழிச்சொற்களாலாலேயே ஏரியின் பெயர் வழங்கப்படுகின்றது.--செல்வா 17:52, 26 பெப்ரவரி 2008 (UTC)

இங்கு great என்பது கரடியைச் சிறப்பித்தே கூறுகிறது. ஏரியை அல்ல. எனவே பெருங்கரடி ஏரி என்று கூறுவது பொருந்தும்.--ரவி 17:53, 26 பெப்ரவரி 2008 (UTC)

ரவி, எசுப்பானிய மொழியிலும் (Gran Lago del Oso), பிரான்சிய மொழியிலும் (Grand lac de l'Ours) கூறுவதை நோக்கினால், பேரேரி என்பதுதான் கருத்து போலும் தோன்றுகின்றது. கரடிப் பேரேரி என்பது சரியான பெயராகத் தெரிகின்றது. ஆங்கில மொழியில் இருப்பது குழப்பம் தரும் பெயரடையாக உள்ளது. கிரேட் என்பது ஏரிக்கான பெயரடையா அல்லது கரடிக்கான பெயரடையா என்று கூறுதல் கடினம், ஆனால் இலத்தீன மொழிகளான பிரான்சிய, எசுப்பானிய மொழிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுளைதை நோக்கலாம்.--செல்வா 18:04, 26 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரடிப்_பேரேரி&oldid=215914" இருந்து மீள்விக்கப்பட்டது