பேச்சு:கண்டுபிடிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதன், பகுப்பு பேச்சு:புத்தியற்றுநர் பக்கத்தில் உள்ள கருத்துக்களைப் பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். கண்டுபிடிப்பு (உள்ளதைக் கண்டு அதனை உறுதி செய்தல் , வலுவாக பற்றுதல் கண்டு பிடிப்பு discover). கண்டறிதல் என்பது சற்றேரக்குறைய அதே பொருள்தான். கண்டேன் என்பது உளதைக் கண்டேன். படைத்தேன் என்றால் புதிதாக ஒன்றை ஆக்கினேன், படைத்தேன் எனப் பொருள் கொள்ளலாம். புதிதாக் ஆக்குதல், புதிதாக படைத்தல், புதிதாக இயற்றுதல் என்பதன் அடிப்படையாக இருப்பது invent என்பதற்கு நெருக்கமாக வரும் என்பது என் கணிப்பு. எனவே புதுப்படைப்பு, புத்தாக்கம், புத்தியற்றல் (புதிதாக இயற்றுவது) என்பது போன்ற சொல்லாக இருக்கவேண்டும். கண்டுபிடிப்பு என்பது பரவலாக அறியப்பட்ட சொல் என்பதை உணர்கிறேன், ஆனால் அது discover என்பதற்குத்தான் பொருந்திவரும் என நினைக்கிறேன். எப்படியாயினும், discover, invent, creation, transcreation முதலான தொடர்பான சொற்களில் சிலவற்றையாவது பிரித்துணர்த்துவதும் இக்கட்டுரைக்குப் பொருந்தும் என நினைக்கிறேன்--செல்வா 18:26, 13 மார்ச் 2007 (UTC)

செல்வா, இக்கட்டுரை, பெரும்பாலும், இத்தலைப்பிலுள்ள ஆங்கிலக் கட்டுரையின் மொழி பெயர்ப்பே எனினும், இதிலுள்ள கலைச் சொற்கள், பக்தவச்சல பாரதி எழுதிய பண்பாட்டு மானிடவியல் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டது. இந் நூலின்படி,
  • கண்டுபிடிப்பு = Invention
  • வெளிப்படுத்தல் = Discovery

இவற்றைவிட Inovation என்பதற்குப் புத்தாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன். நீங்கள் சொல்வதும் பொருந்தும் போல்தான் தெரிகிறது. அத்துடன் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏனைய சொற்களுக்குரிய விளக்கங்களும் கட்டுரையில் இடம்பெறுவது நல்லதுதான். நீங்களே வேண்டிய திருத்தங்களைச் செய்துவிடுங்களேன். Mayooranathan 19:06, 13 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கண்டுபிடிப்பு&oldid=112757" இலிருந்து மீள்விக்கப்பட்டது