பேச்சு:ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் என்றால் அம்பு. எய்தல் என்றால் அம்பு எய்தலைக் குறிக்கும். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று கூறுவதும் வழக்கம் அல்லவா? ஏவுதல் என்றாலும் அம்பை எய்தல் (செலுத்துதல்; எ.கா. ஏவுகணை). அம்பை எறிந்தால் அது சென்று விழும் எல்லைக்கு ஏப்பாடு என்று பெயர். கழக அகராதியைப் பாருங்கள். அதில் ஏப்பாடு = அம்பு விழும் எல்லை என்று தெள்ளத் தெளிவாகக் கொடுத்துள்ளனர். ஆங்கிலத்திலே range என்னும் சொல்லின் பொருள் இப்படி ஒன்று செல்லும் அல்லது சென்று அடையும் எல்லையை (தொலைவை)க் குறிக்கும். அறிவியலில் மிகவும் தேவையான ஒரு சொல், கருத்து. ஏப்பாடு என்பதை ஒன்று ஏகிச் சென்று அடையும் தொலைவு, எல்லை, புலம் என்று பொருள் கொள்வது சாலப்பொருந்தும். ஒலியை செலுத்தி, அது ஊடகத்தின் வழியே செல்லும் எல்லையில் பொருளால் தட்டுப்பட்டு எதிர்ந்து வரும் ஒலியலைகளைக் கொண்டு அறியும் நுட்பியல் இது அல்லவா? எனவே Sonar (originally an acronym for Sound Navigation And Ranging) என்பதை ஒலி ஏப்பாட்டுத் துழாவி எனலாம். சுருக்கமாக சோனார் எனப்படும் ஒலிதுழாவி எனலாம். ஒலிதுழாவி என்பது சோனார் என்பதற்கு ஈடாகக் கொள்ளலாம். (உரை தி. செய்ய இப்பொழுது நேரம் இல்லை, இதனை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். ஏப்பாடு என்னும் சொல்லை எளிதாக பயன்பெருக எடுத்தாளலாம்)--செல்வா 14:33, 11 ஜூன் 2010 (UTC)