பேச்சு:ஐதரசன்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 20, 2016 அன்று வெளியானது. |
ஆண்டு அறிக்கை பேச்சுப் பக்க விவாதத்திற்கு ஏற்ப தனிமங்கள் குறித்த அடிப்படை கட்டுரைகளில் முதலாவதாக ஹைட்ரஜன் குறித்து முதற் கட்டுரை தொடங்கியுள்ளேன். தற்காலிகமாக தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம் இயங்காததால் சில விடயங்கள், வார்ப்புருக்களை தமிழாக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் போது நீங்களும் உதவலாம். தொடர்ந்து நாடுகள், தேசத்தலைநகர்கள், இனங்கள், நாணயங்கள், மொழிகள் குறித்த அடிப்படை கட்டுரைகள் அனைவரும் உருவாக்க முனைந்தால் வரவேற்கத்தக்கதாய் இருக்கும்.--ரவி 14:40, 24 டிசம்பர் 2005 (UTC)
- நல்ல முயற்சி ரவி, வழமை தமிழ் பெயரையும் குறித்தால் நன்று. மற்றும் தமிழ் பெயருக்கு ஒரு redirect செய்தாலும் நன்று. --Natkeeran 14:54, 24 டிசம்பர் 2005 (UTC)
பாராட்டுக்கு நன்றி நற்கீரன். தமிழ்நாட்டில் இதற்கு தமிழ்ப்பெயர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஹைட்ரஜன் என்றே பாடப்புத்தகங்களில் அழைப்பதாக கருதுகிறேன். தமிழ்ப் பெயர்கள் உள்ள தனிமங்கள் பட்சத்தில் நிச்சயம் பக்கத் தலைப்புகள் தமிழில் அமைத்து அனைத்துலகப் பெயர்ப் பக்கத்தில் இருந்து வழிமாற்று செய்யலாம். நீங்கள் hydrogen மற்றும் nitrogenஐ மாற்றி சொல்கிறீர்களோ என்று எனக்கு ஒரு சிறு குழப்பம். தயவு செய்து தெளிவுபடுத்தவும்
எனினும் Hydrogenன் பெயர்க்காரண மூலத்தை பார்க்கும்போது இதற்கு நீருருவாக்கி என்ற பெயர் வைக்க temptingஆக உள்ளது :) ஆனால், இது போன்று மொழிமாற்றி பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதற்கான காலம் கடந்து விட்டதா எனத் தெரியவில்லை. கணினி தொடர்பான சொற்களை இறுதிப்படுத்த அனைத்துலகத் தமிழர் அமைப்புகள் இருப்பது போல் ஒவ்வொரு துறைக்கும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் தோன்றி செய்ய வேண்டிய வேலை இது. அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறான சொற்பரிந்துரைகளை செய்வது எளிதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பொதுவாக தமிழ் வழிக் கல்வியில் ஆர்வமும் அதன் பால் உள்ள மதிப்புக் குறைந்து வரும் வேளையில் இதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கணிக்க இயலவில்லை. பொருள் இல்லார் பிள்ளைகள் மட்டும் வேறு வழியின்றி அரசு உதவும் குறைந்த கட்டண தமிழ் வழிப் பள்ளிகளில் பயில்வது போல் தற்பொழுது ஒரு நிலை உருவாகி வருவது வருத்ததற்குரியது. தமிழார்வமுடையவர்கள் ஆங்காங்கு தரமான தமிழ் வழி மழலைப் பள்ளிகள் தொடங்க முனைகிறார்கள் என்றாலும் இம்முயற்சி தொடக்கக்கல்வி தொட்டு பல்கலைக்கழகக் கல்வி வரை தொடர்ந்தால் மட்டுமே அறிவியல் தமிழ் கலைச்சொல் உருவாக்கம், தமிழ் வழி அறிவியல் சிந்தனை ஆகியவை அதிக பயனுள்ளதாய் விளங்கும். இல்லாவிட்டால், எத்தனை கலைச்சொல் அகராதிகள் உருவாக்கினாலும் அவை பரணில் உறங்குவதாயோ தமிழ் மட்டும் அறிந்த மூத்த தலைமுறையினர் மற்றும் கிராமத்தினருக்கு உதவுவதாக மட்டுமோ அமைந்து விடும்.
எனினும் மாணவர்கள் பயிலும் வழியத்திற்கும் அப்பாற்பட்டுத் தான் தமிழ் மீதான ஈடுபாடு அவர்களின் ஈடுபாடு அமைகிறது. தமிழ் வழி பயின்ற பலர் கழிவிரக்கம் கொண்டு தமிழ் வழிக் கல்வியை வெறுப்பதும், ஆங்கில வழிப் பயின்ற பலர் தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதும் கண்கூடு. நான் உட்பட பெரும்பாலான தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர்கள் ஆங்கில வழிக் கல்வி பெற்றவர்கள் (எனினும் தமிழை முறையாக ஒரு மொழிப்பாடமாக பன்னிரு ஆண்டுகள் பயின்றிருக்கிறோம்) என்பது கவனிக்கத்தக்கது.--ரவி 15:20, 24 டிசம்பர் 2005 (UTC)
- தவறு என்னுடையதே, நான் மேலோட்டமாக வாசித்ததில் கைட்டிரியனை நைற்றியன் என்று வாசித்து விட்டேன். H என்பதை கூட குறித்து கொள்ளவில்லை :-( பல பொதுவாக பாவிக்கபடும் தனிமங்களுக்கு தமிழில் சொற்கள் உண்டு. இலங்கையில் உயர்வகுப்புகளில் தமிழ் பயன்படுத்தபடுவதால், இச்சொற்களுக்கு தமிழ் வழமை சொற்கள் இருக்க சந்தர்ப்பம் உண்டு. அப்படி இல்லாவிட்டால் உங்களின் பரிந்துரை நன்றே. இராம்.கி போன்றவர்களை விக்கிபீடியாவில் ஈடுபாடு செய்ய வைத்தால் இவ்விடயங்களில் மேலும் முன்னேற்றம் காணலாம். இலங்கை அரசும், மற்று விடுதலைப் புலிகள் சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அம்முயற்சிகளில் தனிமங்கள் பெயர்கள் அடங்குமா என்பது தெரியவில்லை. --Natkeeran 17:04, 24 டிசம்பர் 2005 (UTC)
- ஃஐடிரசனுக்கு தமிழில் நீரதை என்று 1970களில் இருந்து ஒரு பெயர் உண்டு. இவற்றை பிறைக்குறிகளுக்குள் இட்டு குறித்து வரலாம். பொதுவாக ஹைடிரசன் , ஐதிரசன் அல்லது ஃஐடிரசன் என்று ஏதேனும் ஒரு தரம் செய்யப்பட்ட முறையில் வழங்கி வருவதுதான் நல்லது. வேதியியல் தனிமப் பொருட்களுக்கு ஆங்லிலத்தில் வழங்கும் பெயர்களை நாம் அப்படியே எடுத்து ஆளுவது நல்லது. (தங்கம், வெள்ளி, இரும்பு, ஈயம், துத்தநாகம், செம்பு, கரிமம் முத்லைய ஒரு சிலவற்றைத் தவிர்த்து). என்றாலும் தமிழ்ப்பெயர்களையும் கூடவே குறித்து வருவதும் நல்லது. --C.R.Selvakumar 04:04, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
செல்வாவின் கருத்துடன் முழுக்க உடன்படுகிறேன்.--ரவி 07:06, 19 ஜூன் 2006 (UTC)
Start a discussion about ஐதரசன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஐதரசன்.