பேச்சு:ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//பெரும்பாலும் வரலாற்றுப் பெறுமானம் கொண்ட பழைய நூல்களை, அவை அழிந்துவிடாமல் இருப்பதற்காக மறுபதிப்புச் செய்வதை நோக்கமாகக் கொண்ட//

நான் அவதானித்த அளவில் இந்நிறுவனம் வரலாற்றுப் பெறுமதியுடைய நூல்களை மறுபதிப்புச் செய்யும் வியாபார நிறுவனம் மட்டுமே. அவை அழியாமலிருக்கத்தான் மறுபதிப்புச் செய்கிறார்களென்றால்,

  1. பதிப்பு விபரங்களைத் தொடர்ந்து பேணுவார்கள்; அவ்வாறில்லை. மிக முக்கிய பதிப்புத் தகவல்களடங்கிய முதற் பக்கங்களை விடுத்துப் பதித்த நூல்கள் பல உள.
  2. தெளிவற்ற பக்கங்களையாவது மீளத் தட்டெழுதி அல்லது தெளிவாக்கி அச்சிடுவார்கள்; அவ்வாறு செய்வதில்லை. கிடைத்த நூலை ஒளிநகலெடுத்து வெளியிடுவதொன்றே அவர்கள் செய்வது.

இதற்கப்பால் இவர்களது முயற்சிகளால் பல அரிய நூற்கள் படிக்கக் கிடைக்கின்றன என்பது உண்மை. ஆனால் இது வணிக நிறுவனமே. --கோபி 16:22, 20 ஜனவரி 2007 (UTC)

கோபி, உங்களுடைய கருத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனாலும், வருமானம் இல்லாமல் யார்தான் இப்படி ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிடமுடியும்? இலாபம் மட்டுமே முக்கியம் என்றால் அதற்கு இந்தமாதிரியான நூல்கள் அதிகம் பொருத்தமில்லை. யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாண வைபவ கௌமுதி, கதிரேசு அவர்கள் எழுதிய, A Hand Book on Jaffna Peninsula, மார்ட்டின் எழுதிய Notes on Jaffna போன்ற பல குறைந்த சந்தை வாய்ப்புக்களைக் கொண்ட நூல்களைக்கூடப் பதிப்பித்து வாங்கக்கூடிய விலையில் வெளியிடக்கூடிய திராணி பலருக்கு இருக்கும் என நான் நினைக்கவில்லை. இவர்களால் வெளியிடப்பட்ட 25 க்கு மேற்பட்ட நூல்கள் என்னிடம் இருக்கின்றன. இந்தப்பதிப்புகள் இல்லாவிட்டால், இந்நூல்களை என்னைப்போன்ற பலர் பார்த்திருக்கவே முடியாது. Mayooranathan 18:16, 21 ஜனவரி 2007 (UTC)
நீங்கள் கூறுவது உண்மையே. இந்நிறுவன முயற்சியால்தான் பல பழைய ஈழத்து நூற்களை மீண்டும் பார்க்க முடிந்தது. என்னிடமும் சில உள்ளன. ஆனால் இவர்கள் சில சமயங்களில் முன்னைய பதிப்புவிபரங்கொண்ட பக்கங்களைத் தவற விடுவது தம் பணியின் எதிர்கால முக்கியத்துவத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாமையாலும் இருக்கலாம்.
//அவை அழிந்துவிடாமல் இருப்பதற்காக // என்பதை நீக்குவதில் உங்களுக்கு ஆட்சேபணை உள்ளதா?
மேலும் இவ்வுரையாடலுக்குத் தொடர்பற்ற ஒரு சந்தேகம். ஆட்சேபனை, ஆட்சேபணை இவற்றில் எது சரியானது? கோபி 20:14, 21 ஜனவரி 2007 (UTC)
நீங்கள் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டுவிட்டது. மதராஸ் பல்கலைக்கழக அகராதியில் தேடிப்பார்த்தேன் இரண்டே இரண்டு இடங்களில் தான் இச்சொல் அகப்பட்டது. ஓரிடத்தில் ஆட்சேபனை என்றும் இன்னோரிடத்தில் ஆட்சேபணை என்றும் உள்ளது.Mayooranathan 02:25, 22 ஜனவரி 2007 (UTC)