பேச்சு:எப்போதும் வென்றான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியம் 1980-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்மமரணம் குறித்த உண்மைத் தகவல்களை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு வெளியிட தயக்கம் காட்டிவந்தது. எனவே, இதனை கண்டித்து, அப்போதைய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி 1982-ல் மதுரை முதல் திருச்செந்தூர் வரை 200 கி.மீ. தொலைவுக்கு ‘நீதி கேட்டு நெடும்பயணம்' என்ற நடைபயணத்தை மேற்கொண்டார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நடைபயணமாக கருதப்படும் இந்த பயணத்தை எப்போதும் வென்றாம் கிராமத்தின் வழியாக மேற்கொண்ட கலைஞர், இந்த கிராமத்தில் சில மணிநேரம் ஓய்வும் எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’ தொகுப்பிலும் விரிவாக குறிப்பிட்டுள்ளார் கலைஞர் கருணாநிதி. அதோடு மட்டுமின்றி, தேர்தல் பரப்புரைகளின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ‘எப்போதும் வென்றான்’ என்று ஒரு கிராமம் இருக்கிறது என சொல்லி, அதேபோல ‘எப்போதும் வென்றான்களாக நாம் இருக்க வேண்டும்’ என பேசுவார் கலைஞர்.

இது எப்போதும் வென்றான் தலைப்பைச் சார்ந்ததா அன்றி கலைஞர் மு. கருணாநிதி தலைப்பைச் சார்ந்ததா?--−முன்நிற்கும் கருத்து ElangoRamanujam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.