பேச்சு:இருபாலுயிரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபாலுயிரி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

.அழிதூஉ என்ற பெயர் அறியாத பெயராகவும், அர்த்தம் புரியாமலும் இருப்பதனால், இருபால் உயிரி என்ற தலைப்பை முதன்மைத் தலைப்பாகக் கொடுத்து, உள்ளே இந்தப் பெயரைக் கொடுப்பது நல்லது என நினைக்கின்றேன். அவசியமானால் அழிதூஉ என்ற தலைப்புக்கு ஒரு வழிமாற்றை விட்டுச் செல்லலாம். ஏனையோரின் கருத்துக்களையும் வேண்டுகின்றேன்.--கலை (பேச்சு) 17:13, 26 நவம்பர் 2013 (UTC)Reply[பதிலளி]

பெயர்கள் நல்ல தமிழில் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். சிறுமுதுஅறிஞர் போன்ற தலைப்புகளைக் காட்டாகச் சொல்லலாம். ஆனால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் உயிரியலாய் இருக்குமாயின் அழிதூஉ என்ற சொல் தொடர்பற்றது. பாவாணரின் தமிழ் வரலாறு என்ற நூலூள் உள்ள வரிகள்:

ஆண் தன்மை மிக்க பெண் - பேடன்

பெண் தன்மை மிக்க ஆண் - பேடி

இரண்டிற்கும் பொதுப்பெயர் - பேடு

ஆணும் பெண்ணும் அல்லாதது - அலி, அழிதூஉ

ஆண் தோற்றமுள்ள அலி - ஆணலி

பெண் தோற்றமுள்ள அலி - பெண்ணலி

ஆண் பெண் இரு பாலும் உள்ள உயிரி அலியன்று. இருபால் உயிரி எனலே பொருந்தும். அலி மனிதரைக் குறிக்க வந்தது. மனிதரில் ஆண் பெண் இருபால் உறுப்புகள் காணப்படுதல் அரிதினும் அரிது. அத்தோடு அலி எனும் சொல் இழிவழக்காகவும் கருதப்படுதலால் இச்சொல்லைத் தவிர்த்தல் நன்று.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:35, 26 நவம்பர் 2013 (UTC)Reply[பதிலளி]

இதன்படி பார்க்கையில், அழிதூ என்ற சொல் கட்டுரைக்குப் பொருத்தமற்றது எனத் தெரிகிறது. எனவே கட்டுரையின் உள்ளேயும் இந்தச் சொற்களை அகற்றித் திருத்தம் செய்ய வேண்டும். --கலை (பேச்சு) 03:40, 13 சூலை 2015 (UTC)Reply[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருபாலுயிரி&oldid=1876372" இலிருந்து மீள்விக்கப்பட்டது