பேச்சு:இருபடிச் சமன்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபடிச் சமன்பாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இரண்டு கருத்துகள்[தொகு]

  1. இருபடி என்பதை இருபடிய என்று எழுதுவது சரியாக இருக்கும். தேசம்-தேசிய, சிறு-சிறிய, பெரு-பெரிய, அழகு-அழகிய என்பன போல் -இய என்னும் பின்னொட்டு இட்டால் இயல்பாய் இணங்கி வரும். இருபடியச் சமன்பாடு என்றால் சரியாக இருக்கும். இருமடியச் சமன்பாடு என்றும் கூறலாம்
  2. லெக்ராஞ்சி என்று உள் தலைப்பு இருக்கின்றது, ஆனால் முதல் வரியிலேயே லாக்ராஞ்சி என்று வருகின்றது. ஏதாவது ஒன்றைத் தேர்ந்து சீராக அதே வடிவில் Joseph-Louis Lagrange அவர்களின் பெயரைக் குறிக்கலாம். லெக்-லாக் என்பதற்கு மாறாக லெகுராஞ்சி-லாகுராஞ்சி-லகுராஞ்சி என்றோ இலகுராஞ்சி என்றோ கூறலாம். க் என்பது எப்பொழுதும் வலித்து ஒலிக்கும் வல்லினமாகவே தமிழில் வரும் (எல்லா வல்லின ஒற்றுகளும் அப்படியே). எப்படி இருப்பினும், ஒரே சீராக ஒரு கட்டுரைக்குள்ளாவது வருதல் நலல்து.

--செல்வா 15:36, 29 பெப்ரவரி 2012 (UTC)