பேச்சு:இசுடீவ் இர்வின்
Appearance
Untitled
[தொகு]அன்றாடச் செய்திகளில் அடிபடும் இது போன்ற கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி, kanags--ரவி 12:42, 5 செப்டெம்பர் 2006 (UTC)
Ray என்பது தமிழில் நெடுங்காலமாக திருக்கை என கூறப்படுவது. Sting Ray எனப்படுவது அட்டவண்ணைத் திருக்கை என்பதாகும். இறைவனிடம் இடர்கள் ஏதும் வாராது காக்குமாறு வேண்டிக்கொள்ளும் சஷ்டிக் கவசம் முதலான கவசப் பாடல்களில் திருக்கை என்பது குறிக்கப்படுவதைக் காணலாம். திருக்கை பற்றி நல்ல கட்டுரை ஒன்று எழுதவேண்டும். இவ்வகை நீர்வாழ் திருக்கைகளில் பல வகைகள் உண்டு (குருவித்திருக்கை, சப்பைத்திருக்கை--C.R.Selvakumar 16:41, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
திருக்கை வகைகள்
[தொகு]தமிழில் கீழ்க்காணும் திருக்கைகள் பற்றி சிறு குறிப்புகளாவது கிட்டும்:
- புள்ளியந்திருக்கை, புள்ளித்திருக்கை
- பெருந்திருக்கை (= அட்டவண்ணைத் திருக்கை, Sting Ray)
- முள்ளந்திருக்கை
- கள்ளத்திருக்கை
- செந்திருக்கை
- சட்டித்தலையன்
- வருக்கை
- திருக்கை வெட்டியான்
- தப்பக்குழி, தப்பக்குட்டித் திருக்கை
- திருக்கையாரல்
- சோனகத்திருக்கை
- கருவாற்றிருக்கை
- கோட்டான் திருக்கை
- ஒட்டைத்திருக்கை
- மணற்த்திருக்கை
- நெய்த்திருக்கை
- குருவித்திருக்கை