பேச்சு:ஆஸ்திரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசுத்திரியா என்று மாற்றலாமா ? - இராஜ்குமார்

ஆசுத்திரியா என்பது பொதுவழக்கில்லையே. அத்தோடு வெகுமக்கள் ஊடகங்கள் அனைத்தும் ஆஸ்திரியா என்று தான் பயன்படுத்தி வருகின்றன. தமிழ் இலக்கண நூல்கள் எதிலும் ஸ் என்ற ஒலிக்கு சு என்ற எழுத்திட்டு எழுதுமாறு கூறியதும் இல்லை. --Winnan Tirunallur (பேச்சு) 10:41, 21 ஆகத்து 2015 (UTC)
Ester-எசுத்தர் என்பதுடன் ஒப்புநோக்குக. --மதனாகரன் (பேச்சு) 10:51, 21 ஆகத்து 2015 (UTC)
Ester என்ற சொல்லை பொதுவில் யாரும் எசுத்தர் என பயன்படுத்துவதில்லை. தமிழ் பாடநூல்களில் எஸ்டர் என்று தான் எடுத்தாளப்படுகின்றன. --Winnan Tirunallur (பேச்சு) 03:46, 25 ஆகத்து 2015 (UTC)
Asthika என்ற வடசொல்லை தமிழில் ஆஸ்திகன் என கிரந்தம் கலந்தும், ஆத்திகன் என கிரந்தம் தவிர்த்துமே பயன்படுத்தி வருகின்றனர். தாங்களவர்கள் சொல்லும் முறையில் போனால் ஆசுத்திகன் என்றல்லவா இதை தமிழ்படுத்தச் சொல்வீர்கள்?--Winnan Tirunallur (பேச்சு) 03:49, 25 ஆகத்து 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆஸ்திரியா&oldid=1903649" இருந்து மீள்விக்கப்பட்டது