பேச்சு:ஆல்ட்டா கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை மேல் கலிபோர்னியா என்று மாற்றலாமா அல்லது மேல் கலிபோர்னியா என்பதை இங்கு வழிமாற்றாக தரலாமா?

எனக்கு upper california என்பதற்கான சரியான தமிழாக்கம் மேல் கலிபோர்னியாவா என்ற ஐயம் இருந்ததாலேயே எசுப்பானியப் பெயரிலேயே தலைப்பிட்டேன். மேல் கலிபோர்னியா என்பது மேற்கு கலிபோர்னியா என்று வருமோ என்ற மயக்கத்தை யாரேனும் தெளிவு செய்தால் நன்று. நானறிந்தவரை மேலப்பாளையம் என்றால் மேற்கிலிலுள்ள பாளையம் என்றே புரிந்து வந்துள்ளேன். தவிர மேல் கலிபோர்னியாவும் தற்போதைய கலிபோர்னியா மாநிலத்தின் மேல்பகுதியும் வேறானாதால் ஆங்கில விக்கிப் பயன்பாட்டை ஒட்டி ஆல்ட்டா கலிபோர்னியா என்று பெயரிட்டேன். இந்த ஐயம் தீர்ந்தால் கட்டுரைத் தலைப்பை மேல் கலிபோர்னியா என்றே நகர்த்தி விடலாம்.--மணியன் (பேச்சு) 03:36, 31 அக்டோபர் 2013 (UTC)

நன்றி மணியன் ஆல்ட்டா கலிபோர்னியா என்பதே எனக்கும் இப்போ சரியாக படுகிறது. மெக்சிக்கோ அமெரிக்க போர் கட்டுரையிலும் திருத்தங்கள் செய்துள்ளேன். --குறும்பன் (பேச்சு) 22:34, 31 அக்டோபர் 2013 (UTC)