உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அவலோகிதர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவலோகிதர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தங்கள் கருத்துகளை இங்கே தெரிவிக்கவும். நன்றி Vinodh.vinodh 10:12, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தலைப்பை அவலோகிதர் என்று மாற்ற வேண்டுகிறேன். அவலோகிதர் பற்றி முனைவர் நா. கணேசன் (நாசா) ஆய்வு செதுள்ளார். அவருடைய கணிப்புப் படி அவலோகிதருக்குப் பொதியமலையுடன் தொடர்புண்டு. தட்சிணாமூர்த்தி வடிவம்மும் அவலோகிதருடைய வடிவமும் நெருக்கமானவை என்பார். பொதிய மலையில் அவலோகிதர் தமிழ் கற்பித்தார் என வீரசோழியம் கூறுகின்றது என்கிறார் (பார்க்கவும்). அவலோகிதர் என்னும் தலைப்பு எளிதாகவும் தமிழ் இயல்புக்கு ஏற்றதாகவும் இருக்கும். --செல்வா 17:08, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும். அவலோகிதேஷ்வரர் என்பதே சரியாக இருக்குமென எனக்கு தோன்றுகிறது. மேலும் எனக்கு தெரிந்த'அவலோகிதர்' என்பது தமிழில் வழக்கில் இல்லாத ஒன்று. மேலும் புத்த மதத்தை பொறுத்த மட்டில் வடமொழி உபயோகம் அதிகமாக இருக்கும்.வடமொழி புறக்கணிப்பு என்பது இயலாது ஒன்று. என்வே வடமொழி ஒலிகளை நீக்கும் தேவை இங்கு இராது. எனவே 'அவலோகிதேஷ்வரர்' என்றே இந்த கட்டுரையை அழைக்கலாம். அவலோகிதர் என்பது இங்கு மீள்வழிப்படுத்துவதாக அமைத்துவிடலாம். மாற்றுக்கருத்துன் இருப்பின் தெரிவிக்கவும் Vinodh.vinodh 19:50, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஒரு மொழியில் எழுதும் பொழுது அம்மொழியின் இயல்பை ஒட்டியே எழுதுவது முறைமை. அழகப்பன் என்பதை Alagappan என்று எழுதுவது போலவும், ஜீஸஸ் என்பதை ஹெஸுஸ் என்று எசுப்பானியர் ((ஸ்பானிஷ் மக்கள்) எழுதுவது போலவும் மொழிக்கு மொழி மாறுபாடுகள் இருக்கும். அதனால் ஒரு மொழியைப் புறக்கணிப்பதாக நினைப்பது தவறு. சமசுகிருதத்தை வளர்த்ததில் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. முனைவர் நா. கணேசன் "தமிழகத்தில் தட்சிணாமூர்த்தியும் பத்மபாணி அவலோகிதரும்" என்று 15-பக்கக் கட்டுரை எழுதியுள்ளார். இங்கே பார்க்கவும். அவலோகிதர் என்று இருப்பது சரியாக இருக்கும். அவலோகிதேசுவரர் என்றும் சொல்லலாம். ஜீஸஸ் என்பதை இயேசு, ஏசு, என்றும் தக்ஷிணாமூர்த்தியை தட்சிணாமூர்தியென்றும் எழுதுவதில் தவறில்லை. கூடிய மட்டிலும் மொழியை ஒட்டியே எழுதுவதே நல்லது. தலைப்பை அவலோகிதரர் என்று முதன்மைப் படுத்தியே எழுதலாம் என்பது என் பரிந்துரை.--செல்வா 00:00, 17 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

முனைவர் நா கணேசன் சுட்டிக்காட்டியுள்ள வீரசோழியம் என்னும் இலக்கண நூலில்,

  • "பன்னூறாயிரம் விதத்தில் பொலியும் அவலோகிதன் மெய்த்தமிழ்" (கிரியாபத படலம் - வீரசோழியம்) என்றும்
  • "ஆயும் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு...." (அவையடக்கம் வீரசோழியம்)

என்றும் எல்லாம் வருவதைக் காண்க. எனவே அவலோகிதர் என்னும் தலைப்பு பொருந்தும். --செல்வா 00:38, 17 நவம்பர் 2007 (UTC) தமிழ் லெக்ஸிகனும் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகின்றது:[பதிலளி]

  • அவலோகிதன் avalōkitaṉ , n. < Ava- lōkita. Name of a Bōdhi-sattva, reputed to have been the instructor of Agastya; பௌத்த முனிவரு ளொருவர். (வீரசோ. பாயி. 2.)

--செல்வா 00:46, 17 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தத்பவம்

[தொகு]

வினோ'த் நீங்கள் சேர்த்திருந்த "தமிழில் இது தத்பாவமாக தமிழில் 'அவலோகிதர்' என் ஆனது" என்னும் வரியை நீகியுள்ளேன். தமிழ் வழக்கு என்பது வேறு தத்பவம் என்பது வேறு. --செல்வா 14:01, 17 நவம்பர் 2007 (UTC

நன்று. முடிந்தால் தாங்கள் அவலோதேஷ்வர(சரி..அவலோகிதர்) போதிசத்துவரின் தமிழ் தொடர்பை குறித்து கட்டுரையில் இணைக்கவும். வினோத் 14:09, 17 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் பற்றிய செய்தியை இணைத்தற்கு நன்றி வினோத் 14:36, 17 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அவலோகிதர்&oldid=186353" இலிருந்து மீள்விக்கப்பட்டது