பேச்சு:அஜந்தா குகைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

]] மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள [[அஜந்தா குகை//இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்துள்ளன.// இங்கே செயற்பாட்டு வினைப் பயன்பாடு பொருத்தமில்லை என்றே படுகிறது எனக்கு. இக்கட்டுரையின் முன்னைய வடிவமே கருத்து விளக்குவதாக இருந்தது. கோபி 19:24, 17 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

தமிழில் செயற்பாட்டு வினைப் பயன்பாடு அதிகமாக ஆங்கிலத் தாக்கம் காரணம் என்பது உண்மை. ஆனால் செய்தவர் யாரெனத் தெரியாத இடங்களுக்குச் செயற்பாட்டு வினையே பொருத்தமானது. அவ்வகையில் இக்கட்டுரையின் முன்னைய வடிவமே பொருத்தமானதாகப் படுகிறது. நன்றி. கோபி 19:27, 17 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கோபி: ("செயப்பாட்டுவினை" என்று சொல்ல நினைக்கிறீர்கள் எனக் கருதுகிறேன். அது நிற்க)செய்தவர் யாரென்று தெரியாதபொழுதும் தமிழில் நாம் "இது இப்படித்தான் செய்திருக்கிறது" என்று சொல்கிறோம்; "செய்யப்பட்ட்டிருகிறது" என்றில்லை. "இப்படிப் பாடியிருக்கிற பாட்டை ஏன் மாற்றிப் பாடுகிறாய்" என்றல்லவா சொல்கிறோம்; "பாடப்பட்டிருக்கிற". "இது நாலு நாளுக்குமுன் வரைந்த ஓவியம்" என்றுதான் இயற்கையாகத்தான் பேசுகிறோம்; எழுதினோம். நாம் ஏன் அடிப்படையை மாற்றி மொழியை மீள்முடியாத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்? இன்று நாம் மாறாவிட்டால் தமிழ்மொழி சிக்கலாக நிலைக்குப் போய்விடும். என்னால் சொல்லமுடிந்ததைச் சொல்லுகிறேன்.

இப்பொழுது நான் மற்றியிருக்கும் நடை: "இந்தியாவின்கள்|குகைகளில் இயற்கை முறையில் வரைந்த ஓவியங்களே அஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரைந்தவையாகும்."

இது இன்னும் பழக்கமாக இருக்கலாம். பயனர்:Perichandra1

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அஜந்தா_குகைகள்&oldid=1776356" இலிருந்து மீள்விக்கப்பட்டது