பேச்சு:அசையாச் சொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதனவியல் --Natkeeran 21:34, 9 ஜனவரி 2010 (UTC)

இக் கட்டுரையில் ஆங்கிலக் கலைச் சொற்கள் குழப்பமான முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன போல் தெரிகிறது. பல இடங்களில் மொழிபெயர்ப்பு பொருளற்றதாகி விடுகிறது (எடுத்துக்காட்டு: "வீடு மனை விற்பனைத் தொழில் என்பது ஒரு சட்டப்பூர்வமான சொல்லாகும்"). Real estate என்பதை "வீடு மனை விற்பனைத் தொழில்" என மொழிபெயர்த்ததால் ஏற்பட்ட விளைவு இது. Real estate, Real property போன்றவற்றுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள் கண்டுபிடித்தால் தான் இதைச் சரிப்படுத்தலாம். "ஆதனம்" என்னும் சொல் இலங்கையில் ஏறத்தாழ Real property போன்ற பொருளில் பயன்படுத்தப் படுவது போல்தான் தெரிகிறது. ஆனால் தமிழ் அகரமுதலிகளில் இச் சொல்லைக் காண முடியவில்லை. தேசவழமை தொடர்பான தமிழ் நூல்களில் "ஆதனம்" என்பதற்கான வரைவிலக்கணத்தைப் பார்க்க முடியுமானால் இதன் சரியான பொருளை அறிந்துகொள்ள முடியும். மயூரநாதன் 16:49, 10 ஜனவரி 2010 (UTC)
ஆதனம் என்பது காணியைக் குறிக்க புழக்கத்தில் இருக்கும் சொல். கனடாவில் ஆதனவியல் எனப்து real estate துறையைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. பாக்க: http://chotkovai.blogspot.com/2009/11/real-estate.html --Natkeeran 16:52, 10 ஜனவரி 2010 (UTC)

ஆதனவியல் என்பது ஆதனம் தொடர்பான துறையையே குறிக்கும் என எண்ணுகிறேன். இயல் என்பது பொதுவாக அறிவுத்துறைகளைக் குறிப்பதற்கான பின்னொட்டாகவே பயன்படுகிறது. நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் உள்ள "ஆதனவியல்" என்பதும் இப்பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் Real estate என்னும் விக்கிப்பீடியாக் கட்டுரையில் Real estate என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தைக் கீழே பார்க்கவும்:

Real estate is a legal term (in some jurisdictions, such as the USA, United Kingdom, Canada, Australia and The Bahamas) that encompasses land along with improvements to the land, such as buildings,fences, wells and other site improvements that are fixed in location -- immovable.

இதன்படி "ஆதனவியல்"என்னும் தலைப்புப் பொருந்தாது. யாழ்ப்பாணத்து வழக்கில் "ஆதனம்" என்பது காணியை மட்டுமன்றி அதிலுள்ள பிற நிலையான பொருட்களையும் சேர்த்தே குறிக்கிறது என்று எண்ணுகிறேன் (உறுதிப்படுத்த வேண்டும்). நீங்கள் கொடுத்துள்ள பட்டியலிலேயே Real Estate Property என்பதற்கு "ஆதனம்" என்று பொருள் கொடுத்துள்ளதைப் பாருங்கள். அத்துடன் Real Estate Agent, Real Estate Broker, Real Estate Community போன்றவற்றுக்கும் ஆதன முகவர், ஆதனத் தரகர், ஆதனச் சமூகம் என்றே சொற்கள் ஆக்கப்பட்டுள்ளன. Real Property என்பதற்கும் "ஆதனம்" என்றே பொருள் தரப்பட்டுள்ளதையும் கவனிக்கவும். ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரைப்படி Real Property என்பது Real Estate ஐ விட விரிவான பொருளுடையது என்பதையும் கவனிக்கவும். மயூரநாதன் 18:18, 10 ஜனவரி 2010 (UTC)

ஆதனம் என்பது ஒரு பக்கம் வழக்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் . ஆனால் இது ஒரு பக்கம் வழக்கில் இல்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம் . அகராதியில் தேடியும் கண்டறியப்படவில்லை . ஆதனம் என்பதற்கு ஆசனம் , ஆகையால் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது . எளிதில் அறிந்து கொள்ள இயலாத ஒரு சொல் . ஒரு வேலை இது வேறு மொழியில் இருந்து வந்திருக்க கூடும் அல்லவா ? ஆகையால் , இவ்வகையான சொற்களை நன்கு பொருள் விளக்கத்துடன் தருவது நல்லது என்பது என் கருத்து . இதன் வேர்ச்சொல் என்ன , இச்சொல்லை எப்படி உருவாக்கினார்கள் என்பதை சற்று ஆராய்ந்து பார்த்து , அதை பற்றிய விளக்கங்கள் கொடுத்து விடுவது நல்லது என்றே நான் நினைகிறேன் . - இராஜ்குமார்23.15 10 ஜனவரி 2010 (riyadh)

இராஜ்குமார், நீங்கள் சொல்வது சரி. இது பற்றி மேலும் ஆய்வுசெய்யலாம். இலங்கையில் இச் சொல் அரசாங்க ஆவணங்கள், சட்ட ஆவணங்கள், உயில்கள் போன்றவற்றில் எல்லாம் பயன்படுகின்ற ஒரு சொல். இது அங்கே மிக நீண்டகாலமாகவே பயன்பாட்டில் உள்ளது. மதாராசுப் பல்கலைக்கழக அகரமுதலியிலும் இச்சொல் மேற்படி பொருளில் தரப்படாதது வியப்பாக இருக்கிறது. சரியான சொல் காணப்படும்வரை தலைப்பை மாற்றாதிருப்பது நல்லது. ஆனால் கட்டுரையில் உள்ள குழப்பமான கலைச்சொல் ஆட்சிகள் திருத்தப்படுவது அவசியம். மயூரநாதன் 15:25, 11 ஜனவரி 2010 (UTC)

மயூரநாதன் நீங்கள் கூறுவது சரி. காணி என்ற அடிப்படைப் பொருளிலும், "காணியை மட்டுமன்றி அதிலுள்ள பிற நிலையான பொருட்களையும் சேர்த்தே குறிக்கிறது" என்பதும் சரியே. இது இலங்கையில் வழக்கில் உள்ளது. வெளி நாடுகளிலும் real estate துறை பற்றிய கட்டுரைகளில் இது, இத்தோடு சேர்த சொற்களும் வழங்குகின்றன. --Natkeeran 03:22, 12 ஜனவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அசையாச்_சொத்து&oldid=470776" இருந்து மீள்விக்கப்பட்டது