உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்ரோநையோபியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்ரோநையோபியம் (Ferroniobium) ஒரு முக்கியமான இரும்பு நையோபியம் தனிமங்களின் கலப்புலோகம் ஆகும். இக்கலப்புலோகத்தில் 60% முதல் 70% வரையில் நையோபியம் பகுதிப்பொருளாக உள்ளது [1]. உயர்-தாழ்வலிமை கலப்புலோக எஃகு தயாரிப்பில், உலக நையோபியம் உற்பத்தியில் 80% நையோபியம் பயன்படுத்தப்படுகிறது. பைரோகுளோர் படிவுகளிலிருந்து தோண்டி எடுக்கப்படும் நையோபியம் அடுத்து நையோபியம் பென்டாக்சைடாக (Nb2O5) மாற்றப்படுகிறது. இந்த ஆக்சைடு இரும்பு ஆக்சைடு மற்றும் அலுமினியத்துடன் சேர்க்கப்பட்டு வெப்ப அலுமினோ வினையின் மூலம் நையோபியம், இரும்பாக குறைக்கப்படுகிறது. பகுதிப்பொருட்களை எலக்ட்ரான் கற்றை உலை எனப்படும் வெற்றிட உலையில் தூய்மைப் படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வார்ப்புருவாக்கத்திற்கு முன்பாக இக்கலப்புடன் உருக்கிய எஃகைச் சேர்த்து பெர்ரோநையோபியம் தயாரிக்கப்படுகிறது [2]. பிரேசில், கனடா போன்ற நாடுகள் நையோபியம் உற்பத்தியில் முன்னிலை பெற்றிருப்பது போலவே பெர்ரோநையோபியம் உற்பத்தியிலும் முன்னிலையில் உள்ளன [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. C. K. Gupta; A. K. Suri; Gupta K. Gupta (1994). Extractive Metallurgy of Niobium. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-6071-4. பார்க்கப்பட்ட நாள் 2008-08-29.
  2. Claude Dufresne; Ghislain Goyette. "The Production of Ferroniobium at the Niobec mine 1981-2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-09-02.
  3. J. Kouptsidis; F. Peters; D. Proch; W. Singer. "Niob für TESLA" (PDF). Archived from the original (PDF) on 2008-12-17. பார்க்கப்பட்ட நாள் 2008-09-02.

.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ரோநையோபியம்&oldid=3587700" இலிருந்து மீள்விக்கப்பட்டது