பெருமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருமகன் என்னும் சொல் சங்க நூல்களில் குறிப்பிட்ட ஒரு குடிமக்களின் தலைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகத்திணைப் பாடல்களில் தலைவன் ‘பெருமகன்’ எனக் குறிப்பிடப்படுதலும் உண்டு. [1] எந்த மன்னன் எந்த வகையான குடிமக்களின் தலைவன் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.

  • ஆவியர் பெருமகன் – பேகன் [2]
  • இளையர் பெருமகன் - அழிசி [3]
  • இளையர் பெருமகன் - தொகுபோர்ச் சோழன் [4]
  • இளையர், கல்லா இளையர் பெருமகன் - புல்லி [5]
  • இளையர், வல்வில் இளையர் பெருமகன் - நள்ளி [6]
  • ஓவியர் பெருமகன் - ஓய்மானாட்டு நல்லியக்கோடன் [7]
  • கள்வர் பெருமகன் - தென்னன் [8]
  • குறவர் பெருமகன் - ஏறைக்கோன் [9]
  • சான்றோர் பெருமகன் - செல்வக்கடுங்கோ வாழியாதன் [10]
  • சோழர் பெருமகன் - இளம்பெருஞ் சென்னி [11]
  • பாணர் பெருமகன் – அகத்திணைத் தலைவன் [12]
  • பூழியர் பெருமகன் - செல்வக்கடுங்கோ வாழியாதன் [13]
  • மடப்பிடி அகவுநர் பெருமகன் - அஃதை [14]
  • மழவர் பெருமகன் - அதயமான் [15]
  • மழவர் பெருமகன் - மாவள் ஓரி [16]
  • வடுகர் பெருமகன் - எருமை நல் நாட்டு அயிரியாறு [17]
  • வயவர் பெருமகன் - ஆய் [18]
  • வயவர் பெருமகன் - தொண்டைமான் இளந்திரையன் [19]
  • விச்சியர் பெருமகன் [20]
  • வில்லோர் பெருமகன் - மிஞிலி [21]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நற்றிணை 150
  2. சிறுபாணாற்றுப்படை 85-86
  3. குறுந்தொகை 258
  4. அகம் 338
  5. அகம் 83
  6. அகம் 152
  7. சிறுபாணாற்றுப்படை 122
  8. அகம் 342
  9. புறம் 157
  10. பதிற்றுப்பத்து 67-18
  11. அகம் 375
  12. ஐங்குறுநூறு 458
  13. புறம் 387
  14. அகம் 113
  15. புறம் 88
  16. நற்றிணை 52
  17. அகம் 253
  18. அகம் 69
  19. பெரும்பாணாற்றுப்படை 101
  20. குறுந்தொகை 328
  21. நற்றிணை 265
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமகன்&oldid=2566376" இருந்து மீள்விக்கப்பட்டது