உள்ளடக்கத்துக்குச் செல்

பெருந்தோட்டம் ஐராவதேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருந்தோட்டம் ஐராவதேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

மங்கைமடம் கடைத்தெருவிலுள்ள யோகீஸ்வரர் கோயிலின் நுழைவாயிலுக்கு எதிரே உள்ள பாதையில் 4 கிமீ தொலைவில் பெருந்தோட்டம் அமைந்துள்ளது.[1] இக்கோயில் சீர்காழி-திருவெண்காடு சாலையில் மங்கைமடத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் ஐராவதேசுவரர் என்றழைக்கப்படுகிறர். இங்குள்ள இறைவி அதுல்யகுஜாம்பாள்.[1]

வரலாறு

[தொகு]

துர்வாசர் என்ற முனிவரின் சாபம் காரணமாக ஐராவதம் காட்டு யானையாகத் திரிய ஆரம்பித்தது. பல தலங்களுக்குச் சென்று அது வழிபட்டது. அவ்வாறான தலங்களில் இறைவன் ஐராவதேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.[2]

விழாக்கள்

[தொகு]

இக்கோயிலில் நவராத்திரியும், கார்த்திகையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 அருள்மிகு ஐராவதேசுவரர் திருக்கோயில், பெருந்தோட்டம்
  2. 2.0 2.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014