பெரிய வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியுசா எண்செட்டி

[1]

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : மியுசா எண்செட்டி Muse ensete

குடும்பம் : மியூசேசியீ ( Musaceae)

இதரப் பெயர்[தொகு]

அபிசினியன் வாழை'

பெரிய வாழை

மரத்தின் அமைப்பு[தொகு]

உயரமான மியுசா எண்செட்டி

வாழை மரங்களில் மிக உயரமானது. இது 25 முதல் 40 அடி உயரம் வளரக் கூடியது. இதனுடைய மரம் பொய் தண்டால் ஆனது. அடிப்பகுதியில் சதைப் பற்றுடன் கூடிய கிழங்கு உள்ளது. இதனுடைய இலைகள் பச்சையாகவும், நடுநரம்பு சிவப்பாகவும், இலைகளின் ஓரம் ஊதா சிவப்பு நிறத்திலும் உள்ளது.

வாழையிலிருந்து வளரும் பூங்கொத்து மேல்நோக்கி நேராக வளரும். கீழ்நோக்கி வளைந்து தொங்குவது கிடையாது. பூவடிச் செதில்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதில் சிறிய காய்கள் வருகின்றன. இதனுடைய பழங்களை சாப்பிட முடியாது. பழத்திற்குள்ளே மிக பெரிய விதைகள் உள்ளன.

காணப்படும் பகுதி[தொகு]

இது கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் ஈரமான காட்டுப் பகுதியில் வளர்கின்றன.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வாழை&oldid=3628858" இலிருந்து மீள்விக்கப்பட்டது