பெராக்சியிருசல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெராக்சியிருசல்பேட்டு அயனியின் பந்து மற்றும் குச்சி வடிவம்
பெராக்சியிருசல்பேட்டு எதிர்மின்னயனியின் அமைப்பு

பெராக்சியிருசல்பேட்டு(peroxydisulfate) என்பது S
2
O2−
8
என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அயனியாகும். பொதுவாக இது பெர்சல்பேட்டு அயனி என்று அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் பெராக்சோவொருசல்பேட்டு, SO2−
5
.அயனியையும் இது குறிக்கிறது. பெராக்சியிருசல்பேட்டு அயனியைக் கொண்டிருக்கும் உப்புகள் தோராயமாக ஆண்டொன்றுக்கு 5,00,000 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சோடியம் பெர்சல்பேட்டு (Na2S2O8), பொட்டாசியம் பெர்சல்பேட்டு (K2S2O8), அமோனியம் பெர்சல்பேட்டு ((NH4)2S2O8) போன்றவை முக்கியமான சில உப்புகளாகும். இவ்வுப்புகள் யாவும் நிறமற்றவை, நீரில் கரையக்கூடியவை மற்றும் வலிமையான ஆக்சிசனேற்றிகள் ஆகும்.[1]

பயன்பாடுகள்[தொகு]

சிடைரீன், அக்ரைலோநைட்ரைல் மற்றும் புளோரோ ஆல்க்கீன்கள் போன்ற ஆல்க்கீன்களின் பலபடியாக்கல் வினைகளைத் தொடங்கி வைக்கப் பெராக்சியிருசல்பேட்டு உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பெராக்சியிருசல்பேட்டு உப்புகள் இவ்வினையில் சமப்பிளவு அடைந்து பலபடியாதல் வினையைத் தொடங்கி வைக்கின்றன.

[O3SO–OSO3]2− ⇌ 2 [SO4]•−

பிரதான வர்த்தகப் பயன்பாடுகள் தவிர்த்து பெராக்சியிருசல்பேட்டுகள் ஆய்வகங்களிலும் வினைகளில் பங்கேற்கின்றன.:

  • எல்ப்சு பெர்சல்பேட்டு ஆக்சிசனேற்றம்
  • Ag+ யிலிருந்து Ag2+ ஆக ஆக்சிசனேற்றம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Harald Jakob, Stefan Leininger, Thomas Lehmann, Sylvia Jacobi, Sven Gutewort (2005), "Peroxo Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a19_177.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெராக்சியிருசல்பேட்டு&oldid=2061653" இலிருந்து மீள்விக்கப்பட்டது