பெய்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சராயா ஜேட் பெவிசு (Saraya-Jade Bevis)  பிறப்பு ஆகஸ்ட் 17, 1992) என்பவர் ஒரு முன்னாள்  இங்கிலாந்து தொழிற்முறை மற்போர் வீரர், நடிகை ஆவார். இவர் பெய்ஜ் எனும் மேடைப் பெயரால் அறியப்படுகிறார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் சுமாக்டவுன் நிகழ்ச்சியின் மேலாளராக இருக்கிறார். என் எக்ஸ் டி டிவாஸ் வாகையாளர்  பட்டத்தினை இரு முறை பெற்றுள்ளார்.

ஏப்ரல் 2014 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் தனது முதல் போட்ட்டியில் போட்டியிட்டார். தனது 21 ஆவது வயதில் டி டிவாஸ் வாகையாளர்   பட்டத்தினைப் பெற்றார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் வாகையாளர் பட்டம் பெற்றவர் ஆனார்.

என் எக்ஸ் டி[தொகு]

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் தனது அங்கத்துவ நிறுவனங்களில்  ஒன்றான எஃப் சி டபிள்யூ எனும் பெயரினை என் எக்ஸ் டி என மாற்றியது.[1] அதன் மூன்றாவது வாரத்தில் சாயில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது முதல் போட்டியில் சோஃபியா கார்டெக்ச் என்பவருடன் மோதினார்.[2] அந்தப் போட்டியில் இவர் தோல்வியடைந்தார்.செப்டம்பர் 2012 முதல் இவருக்குப் பரவலான வரவேற்பு கிடைக்கத் துவங்கியது.[3][4] அதன்பிறகான போட்டிகளில் ஆட்ரி மேரி, [5] சாசா பேங்க்ஸ், [6] எம்மா, [7] அக்சனா [8] மற்றும் அலிசியா ஃபோசுடன் [9][10] பல போட்டிகளில் வென்றார்.

சனவரி 30, 2013 இல் இவர் மேடை அறிவிப்பாளரான சம்மர் ரேவினால் தாக்கப்பட்டார். பெய்ஜிக்கு கிடைத்த புகழினால் பொறாமை அடைந்த சம்மர் ரே அவரைத் தாக்கினார்.[8][11] பின்  ரேவுடன் ஏற்பட்ட சச்சரவில் இவருக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிரகு நடைபெற்ற போட்டியில் ரே அவரைத் தோற்கடித்தார்.[12] இதன்மூலம் அவரின் தொடர்ச்சியான வெற்றி முடிவுக்கு வந்தது. மே 1 அன்று நடைபெற்ற என் எக்ஸ் டி நிகழ்ச்சியில் ரே போட்டி துவங்குவதற்கு முன்பாகவே இவரைத் தாக்கினார். இருந்தபோதிலும் இவர் ரேவினைத் தோற்கடித்தார்.[13] சூனில் தனது முதல் என் எக்ஸ் டி வாகையாளர் பட்டம் பெற்றார்.[14][15][16][17]  தமினா சுனுகா மற்றும் அலிசியா பாக்ஸ் ஆகியோரைத் தோற்கடித்ததன் மூலம் எம்மாவிற்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.  சூலை 24, 2013 இல் நடைபெற்ற போட்டியில் இவர் வாகையாளர் பட்டம் பெற்றார்.[18]

ஆகஸ்ட் 14 இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாகையாளர் பட்டத்திற்கான போட்டியில் ரேவுடன் போட்டியிட்டு அவரை மீண்டும் தோற்கடித்தார். பின் எம்மாவுடன் இணைந்து தனது எதிராளிகளான சம்மர் ரே மற்றும் சாசா பேங்க் ஆகியோருக்கு எதிராக போட்டியிட்டார். மேலும் டிசம்பர் 4 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய நாட்களில் முறையே நடால்யா மற்றும் எம்மா ஆகியோர்க்கு எதிரான வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார். பின் ஏப்ரல் 24 இல் தனது வாகையாளர் பட்டத்தினை இவர் ஒப்படைத்தார். அதுவரையில் அவர் 274 நாட்கள் வாகையாளர் பட்டத்தினை அவர் வைத்திருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பெவிசு ஒரு மற்போர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் பெற்றோர் ஜூலியா ஹேமர் பீவிசு மற்றும் இயான் பீவிசு மற்றும் மூத சகோதரர்கள் ராய் பீவிசு மற்றும் சக் பிராரி ஆகியோரும் தொழில்முரை மற்போர் வீரர்கள் ஆவர்.[19]

சான்றுகள்[தொகு]

 1. Meltzer, Dave (14 August 2012). "WWE News: FCW name being phased out". Wrestling Observer Newsletter. மூல முகவரியிலிருந்து 27 June 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 August 2012.
 2. James, Justin (10 July 2012). "JAMES'S WWE NXT Report 7/4 – Week 3: Chris Hero (Ohno) debuts, Vader's son, Bateman, six-man main event; Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 8 September 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 July 2012.
 3. Chiverton, George (29 August 2012). "Chiverton's NXT Evaluation 8/8 & 8/15 – The real Rankings of top Developmental stars". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 8 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 June 2013. "Paige was the star and is super-over with the Full Sail audience."
 4. James, Justin (17 October 2012). "James' WWE NXT Report 10/10 – Week 17: WWE champ on commentary for excellent NXT Title match, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 1 February 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 June 2013. "Incredibly, Paige gets a bigger pop than Alicia Fox or Kaitlyn, and the crowd is chanting her name."
 5. James, Justin (13 September 2012). "James' WWE NXT Results 9/5: Hero (Ohno) vs. Steamboats feud, Ross interviews new NXT champ, Clay, Usos, more". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 16 September 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 September 2012.
 6. James, Justin (21 December 2012). "James' WWE NXT Report 12/12 – Week 25: Rollins defends NXT Title, Paige in action, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 31 December 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 July 2013. "Banks foes for the hair but runs into a side kick."
 7. James, Justin (10 January 2013). "James' WWE NXT Report 1/9: Big E. captures NXT Title, Shield involved, Pac debut promo, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 17 January 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 January 2013.
 8. 8.0 8.1 James, Justin (31 January 2013). "James' WWE NXT Results 1/30: Tournament continues, Bo Dallas in main event, returns of Bateman, A-Ry & Mason Ryan". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 10 February 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 February 2013. "Paige with a sort of Liontamer for a submission win. Dawson calls it a "Rampage Finish""
 9. James, Justin (26 September 2012). "James' WWE NXT Report 9/19 – Week 14: Hero (Ohno) sparring sessions, Barreta returns, stand-out Divas match, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 4 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 October 2012.
 10. James, Justin (28 November 2012). "James' WWE NXT Report 11/21 – Week 22: Ohno vs. Steamboat main event, Paige vs. A. Fox, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 2 December 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 November 2012. "Paige counters an Irish Whip with a side kick."
 11. James, Justin (8 February 2013). "James' WWE NXT Report 2/6 – Week 32: Tag Tournament continues, Bo Dallas's main-roster debut carries over, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 21 February 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 February 2013.
 12. James, Justin (15 February 2013). "James' WWE NXT Results 2/13 – Week 33: First NXT tag champions crowned, Paige vows to take over the show". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 21 February 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 February 2013.
 13. James, Justin (3 May 2013). "James' WWE NXT Reports 4/17 & 4/24 & 5/1: Jericho in action, The Shield, Clash of Champions featuring several title matches, Paige vs. Summer Rae feud continues, more". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 10 July 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 July 2013.
 14. James, Justin (6 June 2013). "James' WWE NXT Results 5/29 & 6/5: Wyatts defend Tag Titles, NXT Women's Title introduced, #1 contender battle royal, Parade of released NXT wrestlers in matches". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 25 June 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 July 2013.
 15. James, Justin (4 July 2013). "James' WWE NXT Report 7/3 – Week 53: Bo Dallas defends NXT Title, Women's Tourney continues, Mason Ryan". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 28 July 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 July 2013.
 16. Caldwell, James (21 July 2013). "WWE News: NXT spoilers summer episodes – first NXT Women's champ, Flair, more, plus NXT TV in the U.S.?". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 26 June 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 July 2013.
 17. James, Justin (25 July 2013). "James' WWE NXT Results 7/24: First NXT Women's champion crowned & Triple H makes appearance, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 8 August 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 July 2013. "Paige with a fisherman's suplex into a cover for two. Rapid knee lifts to Emma dangling through the ropes."
 18. James, Justin (18 August 2013). "James' WWE NXT Report 8/14 – Week 59: Paul Heyman promo, The Shield six-man tag, Paige defends NXT Title vs. Summer Rae, A.J. Lee promo, Overall Reax". Pro Wrestling Torch. மூல முகவரியிலிருந்து 12 November 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 March 2014.
 19. Wilkes, Joe. "Norwich wrestler Britani Knight aka Saraya-Jade Bevis signed to America’s WWE proving ground, in Tampa, Florida". Norwich Evening News. மூல முகவரியிலிருந்து 8 April 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்ஜ்&oldid=2867289" இருந்து மீள்விக்கப்பட்டது