பென்சோடிரையைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சோடிரையைன்
இனங்காட்டிகள்
21894-87-1
InChI
  • InChI=1S/C6/c1-2-4-6-5-3-1 N
    Key: PXCDDPIOUAJVRE-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12334440
SMILES
  • C1#CC#CC#C1
பண்புகள்
C6
வாய்ப்பாட்டு எடை 72.07 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பென்சோடிரையைன் (Benzotriyne) என்பது C6.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இதை வளைய[6]கார்பன் அல்லது சைக்ளோ[6]கார்பன் என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். கார்பனின் புற வேற்றுமை வடிவமான இச்சேர்மம் கருத்தியலான ஒரு வேதிச்சேர்மமாக கருதப்படுகிறது. ஆறு கார்பன் அணுக்கள் சேர்ந்து இவ்வளையச் சேர்மத்தை உருவாக்குகின்றன. மேலும் இதன் கட்டமைப்பில் முப்பிணைப்புகளும் ஒற்றைப் பிணைப்புகளும் ஒன்று விட்டு ஒன்றாக கார்பன் அணுக்களை இணைக்கின்றன [1].எனவேதான் இச்சேர்மத்தை வளைய[n]கார்பன் குடும்பத்தில் ஒரு சேர்மமாக வகைப்படுத்துகிறார்கள்.

உலோக நீரிலிகளை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தி பென்சோடிரையைன் சேர்மத்தை உருவாக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2011 ஆம் ஆண்டு வரையில் வெற்றி ஏதும் கிட்டவில்லை [2]. இதற்கு மாறாக வளையயெக்சாயெக்சாயீன் எனப்படும் வளைய குமுலீன் எனப்படும் சேர்மம் உருவாக்கப்பட்டது. இதுவும் சிற்றுறுதி நிலைத்தன்மை கொண்ட ஒரு சேர்மமாகவே காணப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. George A. Adamson and Charles W. Rees (1996). "Towards the total synthesis of cyclo[n]carbons and the generation of cyclo[6]carbon". J. Chem. Soc., Perkin Trans. 1 (13): 1535–1543. doi:10.1039/P19960001535. 
  2. Ellis K. Fields, Seymour Meyerson (October 1966). "Arynes by Pyrolysis of Acid Anhydrides". J. Org. Chem. 31 (10): 3307–3309. doi:10.1021/jo01348a046. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சோடிரையைன்&oldid=2548454" இலிருந்து மீள்விக்கப்பட்டது