உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்சு மின்னாற்பகுப்புச் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெட்சு மின்னாற்பகுப்புச் செயல்முறை (Betts electrolytic process) தங்கம் அல்லது வெள்ளிப் பாளங்களிலிருந்து ஈயத்தை சுத்திகரிப்பதற்கு பயன்படும் ஒரு தொழில்துறை செயல்முறையாகும். தாதுக்களிலிருந்து பெறப்பட்ட ஈயம் தூய்மையற்றதாகவே இருக்கும் ஏனெனில் ஈயம் பல உலோகங்களுக்கு ஒரு நல்ல கரைப்பானாகும். பெரும்பாலும் இந்த அசுத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் அதிக தூய்மை மிக்க ஈயம் தேவைப்படும்போது பெட்சு மின்னாற்பகுப்பு செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிசுமத் இல்லாத ஈயம் அவசியமாகின்றபோது இம்முறை முக்கியமானதாகும். [1]

செயல்முறை

[தொகு]

ஈய புளோரோசிலிக்கேட்டும் ("PbSiF6") அறுபுளோரோசிலிசிக் அமிலமும் (H2SiF6) சேர்ந்த கலவை 45 பாகை செல்சியசு வெப்பநிலையில் மின்பகுளியாக இச்செயல்முறையில் பயன்படுத்தப்படுகிறது. தூய ஈயத்தின் மெல்லிய தகடுகள் எதிர்மின்முனையாகவும் சுத்திகரிக்கப்பட வேண்டிய தூய்மையற்ற ஈயம் நேர்மின்முனையாகவும் செயல்படுகின்றன. 0.5 வோல்ட்டு திறன் கொண்ட மின்சாரம் செலுத்தப்படுகிறது. நேர்மின் முனையில் ஈயம் மட்டும் கரைகிறது. மாசுக்களாகத் தனித்துப் பிரியும் தங்கம், வெள்ளி, பிசுமத் போன்றவை ஈயத்தைக் காட்டிலும் விலை உயர்ந்த உலோகங்களாகும். இவை கரைந்து கலனின் அடிப்பகுதியில் சேகரமாகின்றன. தூய ஈயம் எதிர்மின் முனையில் தகட்டின் மீது படிகிறது. மிகத் தூய ஈயம் தேவைப்படும் நிகழ்வுகளுக்கு மட்டும் மின்னாற்பகுப்பு முறை சுத்திகரிப்பு பயன்படுத்தப்படவேண்டும். இல்லையெனில் வெப்பவுலோகவியல் முறைகளான பார்க்சு செயல்முறையும் இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பெட்டர்டன்-கிரோல் செயல்முறையும் பரிந்துரைக்கப்படுகிறது. [2][3][4]

1901 ஆம் ஆண்டு தொடங்கி இந்த செயல்முறைக்கு பல முறை காப்புரிமை கோரி தாக்கல் செய்த இதன் கண்டுபிடிப்பாளர் அன்சன் கார்ட்னர் பெட்சு நினைவாகவே இந்த செயல்முறைக்கு பெட்சு மின்னாற்பகுப்புச் செயல்முறை எனப் பெயரிடப்பட்டது. [5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Charles A. Sutherland, Edward F. Milner, Robert C. Kerby, Herbert Teindl, Albert Melin Hermann M. Bolt "Lead" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a15_193.pub2
  2. Samans, Carl H. Engineering Metals and their Alloys, 1949 MacMillan
  3. Ojebuoboh, Funsho K. (1992). "Bismuth—Production, properties, and applications". JOM 44 (4): 46–49. doi:10.1007/BF03222821. Bibcode: 1992JOM....44d..46O. 
  4. Betts, Anson Gardner (May 2008). Lead Refining by Electrolysis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781409730156.
  5. us 679824 
  6. us 713278 

புற இணைப்புகள்

[தொகு]