உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூர் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், பெங்களூரில் செயல்படும் தமிழ்ச் சங்கமாகும். இதில் தமிழ் தொடர்பான பல்வேறு இலக்கிய விழாக்கள் மாதம் தோறும் நடைபெற்று வருகின்றன. அல்சூரில் உள்ள ஏரிக்கு அருகில் உள்ள முக்கிய சாலையில் தனது அலுவலக கட்டிடத்தை அமைத்துக் கொண்டுள்ளது. திரு மீனாட்சி சுந்தரம் என்பவர் இச்சங்கத்தின் தலைவராக உள்ளார். பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள சாலையில் தமிழக கர்நாடக அரசின் முயற்சியிலும், பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியாலும் திருவள்ளுவரின் சிலை திறந்தக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் தமிழ், கன்னட வகுப்புகளை நடத்துகிறது. தமிழர் கன்னடர்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது..

வெளி இணைப்புகள்

[தொகு]