பூவள நாயகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவள நாயகி என்பது இலங்கையில் அநுராதபுர நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட அம்மனின் வடிவங்களில் ஒன்றாகும்.[1] இது பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வெண்கலத்தாலான இப்படிமம் அநுராதபுர நகரின் கலாசார முக்கோண வலயத்திற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. வழமையான அம்மன் படிமங்களைக் காட்டிலும் வித்தியாசமான அம்சங்களோடு விளங்குகின்றது.[1]

அம்மனின் உருவம் ஸ்தானக நிலையில் உள்ளது. கீழே பீடத்திற்குப் பதிலாக நீர்ச்செடி போன்ற ஒன்றினது இலைகள், மலர்மொட்டுக்கள் போன்றன காணப்படுகின்றன. கன்னிமைப் பருவம் கழிந்த பேரிளம்பெண் போல் அம்மனின் உருவம் தெரிகின்றது. குமின்சிரிப்புடன் விளங்கும் இவ் வடிவில் கண்ணிமைகள் மூடிய கோலத்தில் காணப்படுகின்றன. அம்மனின் நான்கு திருக்கரங்களில் சக்கரம், அக்சமாலை, நிறைகுடம் முதலானவை காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பேராசிரியர். சி. பத்மநாதன். (2000). இலங்கையில் இந்து கலாசாரம். பகுதி - 1. கொழும்பு: இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம். ப:278.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவள_நாயகி&oldid=1693151" இலிருந்து மீள்விக்கப்பட்டது