பூனை மீசை செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனை மீசைச் செடியின் பூ

பூனை மீசைச் செடியின் வெள்ளை நிறப் பூக்கள் பூனை மீசை நீண்டு இருக்கும். இது புதினா செடியின் குடும்பத்தைச் (Lamiaceae) சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Orthosiphon aristatus ஆகும். இது அதிக பட்சம் 3.5 அடி உயரம் மட்டும் வளரக்கூடியது. இச்செடி இந்தியா, வங்காளதேசம், தென்கிழக்காசியா, தென் சீனம், ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது.[1][2][3][4]

பராமரிப்பு[தொகு]

மண்ணின் மேல் சில அங்குலங்கள் உலர்ந்ததாக உணரும் போது பூனை மீசை செடிக்கு நீர் ஊற்றலாம். வசந்த காலத்தில் ஒரு முறையும் மற்றும் கோடையில் ஒரு முறையும் உரம் இட வேண்டும்..பூனையின் மீசை செடிகள் முழு சூரிய ஒளியில் சிறப்பாக வளரும்.

மருத்துவ குணங்கள்[தொகு]

உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர்ப்பை பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைக்களுக்கு, பூனை மீசைச் செடியின் இலைகளை காய வைத்து, பொடி செய்து சுடு நீரில் கலந்து குடிக்க மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kew World Checklist of Selected Plant Families
  2. Tanaka, N., Koyama, T. & Murata, J. (2005). The flowering plants of Mt. Popa, central Myanmar - Results of Myanmar-Japanese joint expeditions, 2000-2004. Makinoa 5: 1-102.
  3. Suddee, S., Paton, A.J. & Parnell, J.A.N. (2005). Taxonomic Revision of the tribe Ocimeae Dumort (Lamiaceae) in continental South East Asia III. Ociminae. Kew Bulletin 60: 3-75.
  4. Khanam, M. & Hassan, M.A. (2008). Lamiaceae. Flora of Bangladesh 58: 1-161. Bangladesh National Herbarium, Dhaka.
  5. "A Systematic Review of the Protective Actions of Cat's Whiskers (Misai Kucing) on the Central Nervous System". Front Pharmacol 11: 692. 2020. doi:10.3389/fphar.2020.00692. பப்மெட்:32477146. 
  6. "Orthosiphon stamineus: traditional uses, phytochemistry, pharmacology, and toxicology". J Med Food 15 (8): 678–90. August 2012. doi:10.1089/jmf.2011.1973. பப்மெட்:22846075. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனை_மீசை_செடி&oldid=3852646" இலிருந்து மீள்விக்கப்பட்டது