பூதாமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூதாமூர், கடலூர் மாவட்டத்தின் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ள ஊர். ஒரு பக்கம் நகர அமைப்பும் மறுபக்கம் முற்றிலும் கிராம அமைப்பும் கொண்டது இந்த ஊர். இந்த ஊர் மக்கள் உழவுத் தொழிலை செய்கின்றனர். இருப்பினும் அனைத்து வித தொழில் செய்யும் மக்களும், பல துறைகளிலும் வேலை புரியும் மக்களும் இங்கு உள்ளனர். இந்த ஊர் மிகவு‌ம் பழமையான பண்பாட்டு கோயில்களை கொண்டது.

கோவில்கள்[தொகு]

ஊரின் முக்கியமானதும் மிகவு‌ம் பழைமையானதும் ஆன கோவில் பூதாமூர், ஏனாதிமேடு அருகில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துலிங்க ஈஸ்பரர் (முனியப்பர்) கோவில் ஆகும். இதனை பெரிய முனியப்பர் என்றும் சப்த முனீஸ்வரர் என்றும் அழைப்பர்.

 இந்த கோவில் 7 உபய நாட்களை' 'கொண்டு திருவிழா நடத்தப்படும். இதில் 3 ம் நாள் திருவிழா மிகவு‌ம் சிறப்பு பெற்றதாக அமையும். திருவிழா காலங்களில் தினமும் இரவு சாமி ஊர்வலம் நடைபெறும். 
  இதனை அடுத்து ஆற்றங்கரை ஓரமாக தீர்த்தாங்கரை பகுதியில் சக்தி மிக்க  கருப்பனார் கோவில் உள்ளது. இது பூதாமூர் மற்றும் ஏனாதிமேட்டில் வாழும் முக்கிய குடும்பங்களுக்கு குல தெய்வம் ஆகும். இந்த கோவிலின் வேல்கள் திட்டக்குடி அடுத்துள்ள துங்கபுரம் என அழைக்கப்படும் சிறுமதுரை எனும் ஊரில் இருந்து எடுத்து வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

  மேலும் பூதாமூர் வள்ளலார் வீதியில் எழுந்தருளியுள்ள  அருள்மிகு ஸ்ரீ செங்கழனி மாரியம்மன் கோவில் மிகவு‌ம் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் செடல் உற்சவம் மிகவு‌ம் கோலாகலமாக நடைபெறும். இது ஆடி மாதத்தில் நடைபெறும் நிகழும் திருவிழா. 100 க்கு மேற்பட்ட பக்தர்கள் இங்கு காப்பு கட்டி பாலக்கரை அருகில் உள்ள மணிமுத்தாறு ஆற்றங்கரையில் இருந்து அலகு அணிந்த வண்ணம் 3km தூரத்திற்கு நடந்து வந்து தங்கள் நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்துவார்கள். மேலும் இதில் அணிந்து மயில் அலகு பார்ப்பவர்களை பரவசம் அடைய செய்யும். 
  இதனை அடு்த்த பூதாமூர் நன்னேரி கரையில் எழுந்தருளியுள்ள  அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன்   கோவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் தீமிதி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா காலத்தில் நடைபெறும்  அரவான் கடா பலி நாடகம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். 

மேலும் ஏரியின் மற்றொரு கரையில் பெரிய அரசமரத்தின் அடியில் பிள்ளையார் கோவில் உள்ளது.

  பூதாமூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 மீ தொலைவில் சிறிய முனியப்பா கோவில் உள்ளது. இதனை மக்கள் ஆலமரத்து முனி என அன்புடன் அழைப்பர். இங்கு நடைபெறும்  தீமிதி திருவிழா மிகவு‌ம் சிறப்பு வாய்ந்தது. இது ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் 1 நாள் வீதம் 10 உபய நாட்களை கொண்ட திருவிழா ஆகும். இந்த ஊர் மக்களின் ஒற்றுமையை குறிக்கும் வண்ணம் இந்த கோவில் திருவிழா அமைந்துள்ளது. 
  இந்த கோவிலின் அருகில்  சிவன் கோவில் உள்ளது. விஷேச காலங்களில் அங்கு சிறப்பு பூஜை நடைபெறும். 
  ஏனாதிமேட்டின் அருகில் ஒரு  சிவன் கோவில்  உள்ளது. இங்கும் விஷேச கால பூஜைகள் நடைபெறும். மேலும் இந்த கோவிலின் சிறப்பு கோவில் முன் பகுதியில் உள்ள ஒரே கல்லால் ஆன பிள்ளையார் சிலை ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதாமூர்&oldid=2604710" இலிருந்து மீள்விக்கப்பட்டது