புவியியல் அடையாளம்
புவியியல் அடையாளம் (geographical indication (GI)) ஒருசில வணிகப்பொருட்களின் பெயர் அல்லது சின்னம் குறிப்பிட்ட புவியியல் அமைவிடம் அல்லது மூலத்தை (காட்டாக, நகரம்,பகுதி,நாடு) குறிப்பிடுவதாக அறியப்படுதல் ஆகும். எடுத்துக்காட்டுகள்: திருநெல்வேலி அல்வா, சிறுவாணி நீர், கங்கை நீர், காஞ்சிபுரம் சேலை, பஞ்சாபி கோதுமை, இலங்கை தேயிலை என்பன. இத்தகைய அடையாளம் மூலமாக அந்த வணிகப்பொருளின் பண்புகள் மற்றும் சிறப்பு குறித்த சான்றிதழ் வழங்கப்படுவதாக உறுதிசெய்து கொள்ள இயலும்.
வரலாறும் சட்டத் தாக்கமும்
[தொகு]ஓரிடத்தின் புகழ்பெற்ற உணவுப் பண்டங்களின் வணிகப்பெயரையும் வணிகச்சின்னத்தையும் பிற நகல் பண்டங்களிலிருந்து பாதுகாக்க பதினொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே அரசுகள் சட்டங்கள் இயற்றி வந்திருக்கின்றன. இத்தகைய சட்டங்கள் மூலம் வணிகப்போட்டி குறைவதால் எழும் தீமைகளைவிட பயனர்கள் நகல்களிடமிருந்து அடையும் பாதுகாப்பு முதன்மையாகக் கருதப்படுகிறது. பல நாடுகளில் புவியியல் அடையாளம் மூலம் வழங்கப்படும் சட்டப்பாதுகாப்பு வணிகச்சின்னங்களுக்கு அளிக்கப்படும் சட்டப்பாதுகாப்பினை ஒத்தது. இந்தச் சட்டம் ஓர் குறிப்பிட்டப் பகுதி அல்லது புவியியல் அமைவிடத்திலிருந்து அவ்வணிகப்பொருளோ அல்லது அதன் கச்சாப்பொருள்களோ தயாரிக்கப்படாத/சேர்க்கப்படாத நிலையில் அவற்றிற்கு அந்த புவியியல் அடையாளத்தை பயன்படுத்துவதை தடை செய்கிறது. தவிர, இச்சட்டத்தின்படி இந்த அடையாளத்தைப் பேணும் சங்கத்தின் தரத்தேர்வுகளை தேறுவதையும் ஓர் நிபந்தனையாக விதிக்கின்றன. புவியியல் அடையாளம் ஓர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கோ வணிகச்சின்னத்திற்கோ உரிமையானதல்ல.
வெளியிணைப்புகள்
[தொகு]- TIME magazine article from August 31, 2003 on geographical indications பரணிடப்பட்டது 2008-11-22 at the வந்தவழி இயந்திரம்
- WIPO page on GIs பரணிடப்பட்டது 2005-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Geographic Indications Resource Website பரணிடப்பட்டது 2018-10-21 at the வந்தவழி இயந்திரம்
- Caslon Analytics Resources Webpages
- [1] பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம்
- A research project on geographical indications
- GI Introduction பரணிடப்பட்டது 2007-05-14 at the வந்தவழி இயந்திரம்