புள்ளி அமைவுரு அச்சுப் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எப்சன் எம். எக்சு.-80

புள்ளி அமைவுரு அச்சுப் பொறி (Dot Matrix Printer) என்பது மை உள்ள நாடாவை ஒரு குறித்த விதத்தில் தட்டுவதன் மூலம் அச்சீடு நடைபெறும் தாக்க அழுத்த அச்சுப் பொறி ஆகும். பெரும்பாலான நிறுவனங்களில் அச்சீட்டுப் பணிகளுக்காக இந்த அச்சுப் பொறி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[1]

நன்மைகள்[தொகு]

புள்ளி அமைவுரு அச்சுப் பொறியின் மூலம் அச்சுப் பதிக்கும்போது பணச் செலவு மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த அச்சுப் பொறியில் படிவுத் தாளைப் பயன்படுத்தி ஒரு தடவையில் பல படிகளை எடுக்க முடியும்.

தீமைகள்[தொகு]

புள்ளி அமைவுரு அச்சுப் பொறியில் அச்சுப் பதிக்கும்போது கூடுதலான ஒலி உருவாகும்.[2] அதே போல இந்த அச்சுப் பொறியில் அச்சிடுவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதாவது, இதனுடைய அச்சிடும் வேகம் குறைவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]