புளோரண்டைன் இஸ்டரிஸ்
புளோரண்டைன் இசிடரிசு (இத்தாலியம்: Istorie fiorentine) என்பது இத்தாலிய மறுமலர்ச்சி அரசியல் தத்துவஞானியும் எழுத்தாளருமான நிக்கோலோ மாக்கியவெல்லி எழுதிய வரலாற்று குறிப்பு நூலாகும். இது 1532 இல் இவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது. [1]
பின்னணி[தொகு]
இத்தாலியின் பிளாரென்ஸ் ராஜ்யத்தில் செல்வாக்கான அரசு பதவியில் மாக்கியவெல்லி இருந்துவந்தார். அரசியல் நிலை மாறி 1512 ஆம் ஆண்டில் பழைய ராஜ வமிசத்தினரான மெடிசி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நகர ராஜ்யத்தின் ஆட்சியுரிமைக்கு வந்தபோது, மாக்கியவெல்லி தன் பதவியினின்றும் நீக்கப்பட்டார். இதனால் இவர் வறுமை நிலைக்கு ஆட்பட்டார். மாக்கியவெல்லியின் வறுமை நிலை கண்டு, இரக்கப்பட்ட மெடிசி பரம்பரையைச் சேர்ந்தவர்கள், 1518-ஆம் ஆண்டில் இவரை அழைத்து பிளாரென்ஸ் வரலாற்றை எழுதும்பணியை ஒப்படைத்தனர். இதற்காக இவருக்கு வருடாந்தரச் சம்பளமாக ஒரு சிறு தொகை கொடுக்கப்பட்டது. தர்க்கமுறையாகத் தொடர்ந்து ஏற்படும் மக்கள் வாழ்க்கையின் மாறுபாடுகளைப் பற்றிய இதுபோன்ற சரித்திரக் குறிப்பு எழுதும் முறை வேறு எந்த மொழியிலும் செய்யப்படாத முதல் முயற்சியாகும். ஆனால் மாக்கியவெல்லி இந்நூலை முற்றுப்பெற முடிப்பதற்கு முன்னால் மார்கியவெல்லி இறந்துவாட்டார். [2]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Niccolo Machiavelli | Biography, Books, Philosophy, & Facts" (in en). https://www.britannica.com/biography/Niccolo-Machiavelli.
- ↑ நாரா. நாச்சியப்பன் (1993). "சிந்தனையாளன் மாக்கியவெல்லி". நூல் (பிரேமா பிரசுரம்): pp. 18-22. https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2020.