புல் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புல் மரம்[தொகு]

[1]

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : சாந்ரோகா பிரிஸி Xanthorrhoea preissii

குடும்பம் : லில்லியேசியீ Liiaceae

இதரப் பெயர்கள்[தொகு]

கருப்பு பையன்[தொகு]

Black boy

புல் பசை[தொகு]

Grass gums

மரத்தின் அமைவு முறை[தொகு]

இது பல பருவச் செடிகளில் நீண்ட காலம் உயிர் வாழக் கூடியது. இதனுடைய அடி மரம் ஒரு அடி அகலத்திற்கு தடிமனாக இருக்கும்.

இலை-மலர் அமைப்பு[தொகு]

சாந்ரோகா பிரிஸி மொட்டு

இதன் மெல்லிய இலைகள் 1 மீ – 1.5 மீ நீளத்திற்கு ரோஜா பூ இதழ் அடுக்குபோல் அமைந்து இருக்கும். இலைகளின் மையப் பகுதியிலிருந்து மேல் நோக்கி மலர் கொத்து வரும் இதில் சிறிய வெள்ளை நிறப் பூக்கள் மலரும். மலர் கொத்தில் உள்ள மொட்டுகளில் முதலில் வடக்கு பகுதியில் (சூரியன்) உள்ள மொட்டுக்கள்தான் மலரும்.புல் மரத்தின் தண்டுப் பகுதியை காய்ந்த பழைய இலைகள் மூடி உள்ளது. இதன் தண்டிலிருந்து கருப்பு அல்லது மஞ்சள் நிள பிசின் வெளிவருகிறது.இச்சாதியில் 14 இனங்கள் உள்ளன. இவைகள் வறண்ட பாறை பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இவைகள் அனைத்தும் அதிக வருடங்கள் உயிர் வாழ்கின்றன.

காணப்படும் பகுதி[தொகு]

இப்புல் மரம் ஆஸ்திரேலியாவில் வளர்கிறது. இம்மரம் மிகமிக அற்புதமானது. இது 2.5 செ.மீ. வளர்வதற்கு 100 ஆண்டுகள் ஆகிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்_மரம்&oldid=2748953" இருந்து மீள்விக்கப்பட்டது