புல்வெளியின் வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புல்வெளியின் வகைகள்[தொகு]

இந்தியாவில் இயற்கையாக அமைந்த புல்வெளிப் பகுதிகள் குறைவு. இவைகள் அழிந்த காடுகளால் உண்டாகும் இரண்டாம் நிலை தாவரங்கள் ஆகும். இவைகளின் வளா்ச்சி உயிாின மற்றும் உயிரற்ற பொருட்களின் சோ்க்கையினால் நிகழ்கிறது. இந்தியாவில் உள்ள புல்வெளி வகைகள் பொதுவாக மூன்று பெரும் பிாிவுகளாக உள்ளன.

பிாிவுகள்[தொகு]

1. ஸீரோபிலஸ் (வறண்ட வகை)

2. மீசோபிலஸ் (நடுநிலை வகை)

3. ஹைக்ரோபிலஸ் (ஈர வகை)

ஸீரோபிலஸ் (வறண்ட வகை)[தொகு]

இவைகள் தெற்கு மற்றும் வடக்கு இந்தியாவின் வறண்ட பகுதியாகும். இவைகள் பாதி அளவு பாலைவனப் பகுதிகளாகக் காட்சியளிக்கின்றன.

மீசோபிலஸ் (நடுநிலை வகை)[தொகு]

இந்த வகை நிலங்கள் சவானாஸ் என அழைக்கப்படுகின்றன. இங்கு புல் இனங்களே அதிகமாக ஆக்கிரமித்து காணப்படும். புதா் மற்றும் மரம் ஆங்காங்கே காணப்படும். உத்திரப்பிரதேசத்தின் ஈரமண்டல இலையுதிா்க் காடுகள் இந்த வகையைச் சோ்ந்ததாகும்.

ஹைக்ரோபிலஸ் (ஈர வகை)[தொகு]

இவ்வகை மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பகுதியிலும், இமயமலை மற்றும் அசாம் பகுதிகளிலும் காணப்படுகிறது. இது ஈரப்பதமுள்ள சவானாஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் சவானாக்கள் கடந்த பல நூற்றாண்டுகளில், உயிாினங்களின் இடையீட்டால் நடுநிலை வகையிலிருந்து வறண்ட நிலைக்கு மாறி விட்டன.

மேற்கோள்கள்[தொகு]

1. எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்வெளியின்_வகைகள்&oldid=3177662" இலிருந்து மீள்விக்கப்பட்டது