உள்ளடக்கத்துக்குச் செல்

புலந்திரிசனா ஜெலந்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டூட்டி ஹெராட்டியி கதையின் பதிப்பை அடிப்படையாகக் கொண்ட பலினீசிய நடன நாடகத்தில் கலோன் அராங்கை பாத்திரத்தை சித்தரிக்கும் பூலாந்திரிசனா ஜெலந்திக்

ஆயு புலாந்திரிசனா ஜெலந்திக் (பிறப்பு : 8 செப்டம்பர் 1947) என்வபர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பாரம்பரிய பாலினேசி நடனக் கலைஞர் ஆவார் மேலும் இவர் ஒரு காது மூக்குத் தொண்டை மருத்துவ நிபுணராகவும் மற்றும் , இந்தோனேசியாவின் பத்ரஜ்ஜன் பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறை விரிவுரையாளராகவும் பணி புரிகிறார் . [1] கரங்கசெமின் கடைசி மன்னர் அனக் அகுங் அங்லூரா கேதுட் கரங்கசெமின் பேத்தி ஆவார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பாலினீசிய-டச்சு தம்பதியரான மருத்துவா் ஏ.ஏ. மேட் ஜெலந்திக் மற்றும் ஆஸ்ட்ரி ஹென்றிட் சுவார்ட் ஆகியோரின் நான்கு குழந்தைகளில் முதல் குழந்தையாக புலந்திரிசனா ஜெலந்திக் பிறந்தார். [2] இவரது தந்தை கரங்கேசம் இராச்சியத்தைச் சேர்ந்த பலினீசிய மரபு வழி இளவரசர் ஆவார். இந்தோனேசிய சுதந்திர எழுச்சியின் போது அவர் நெதர்லாந்து நாட்டில் படித்துக் கொண்டு இருந்தார், அங்கு அவர் தனது வருங்கால மனைவியான ஆஸ்ட்ரியைச் சந்தித்தார். இவா் உலக சுகாதார அமைப்பில் மலேரிய நோயிலாளராகவும் பாலி சுகாதாரத் துறையின் தலைவராகவும் டாக்டர் ஜெலந்திக் இந்தோனேசியா மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களிலும் பணியாற்றி உள்ளார். [3]

புலந்திரிசனா ஜெலந்திக் தனது குழந்தைப் பருவத்தை பாலியில் கழித்தார், அங்கு அவரது தந்தை அவருக்கும் அவருடன் பிறந்தவா்களுக்கும் பாரம்பரிய பாலினீசிய நடனங்களை கற்பிக்கும் பாரம்பரிய நடன நிபுணர்களை வரவழைத்தார். [1] [4] பின்னர் அவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் தனது மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார், மேலும் அவரது கணவர் சோஜோட்டோவை மணந்த பிறகு, அவர் தொழில் நிமித்தம் காரணமாக இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.

வெளி நாட்டில் வசித்து விட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோனேசியாவுக்கு வந்த அவர் தற்போது பாண்டுங்கில் வசித்து வருகிறார். [5] அவர் பத்ஜட்ஜரன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்பிக்கிறார், மேலும் ஒரு காது மூக்குத் தொண்டை சிறப்பு மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார். புலாந்திரிசனா மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனமாகிய ஒலி கேட்டலுக்கான தென்கிழக்கு ஆசியா சங்கத்தின் தலைவராக உள்ளார். [1]

கலாச்சார நடவடிக்கைகள்

[தொகு]

புலந்திரிசனா ஜெலந்திக் “பெங்கல் தாரி ஆயு புலன் ” (ஆயு புலனின் நடன பட்டறை) என்ற நடனக் கலைக்கூடத்தை 1994 ஆம் ஆண்ட பாண்டுங் நகரத்தில் தொடங்கினார். மேலும் ஒரு நடனப் பள்ளியை இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் தொடங்கி நடத்தி வருகிறார்., இது இந்தோனேசியாவிலும் பல நாடுகளிலும் பட்டறைகளை நடத்துவதிலும் நிகழ்த்துவதிலும் தீவிரமாக உள்ளது. [5] ஜகார்த்தாவை தளமாகக் கொண்ட தனது நடனக் குழுவுடன் முக்கியமாக பாரம்பரிய லெகாங் நடனங்களை நிகழ்த்துகிறார். [4] பாரம்பரிய ஜாவானீய நடனங்களின் நிபுணர் ரெட்னோ மாருதியுடனும், மற்றவர்களின் நடன அமைப்பிலும் அவர் ஒத்துழைப்பை நல்கி வருகிறார்..

பாரம்பரிய பாலினீசிய நடனங்களைத் தவிர, இந்தோனேசிய திரைப்படம் மற்றும் திரைப்படத் தயாரிப்பையும் பாலிடாக்சு அறக்கட்டளையுடன் புலாந்திரிசனா ஆதரிக்கிறார், மேலும் சரிதக்சு வெளியீட்டு நிறுவனத்துடன் இணைந்து கலை மற்றும் குழந்தைகள் இலக்கியங்களை வெளியிட்டு வருகிறார்.. [1]

மேலும் தற்போது அவர் ஒன்பது பாரம்பரிய பாலினீசிய நடன வடிவங்களை உருவாக்கி அதனை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரிப்பதற்காக ஊக்குவித்து வருகிறார்.[6]

மேலும் காண்க

[தொகு]
  • அனக் அகுங் அங்லூரா கேதுட் கரங்கசெம்
  • பாலினீசிய நடனம்
  • லெகாங்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Djwan, J.B. (2 February 2010). "Bulantrisna Djelantik: A very nice pair of genes". The Jakarta Post, archived at purikarangasem.com. Archived from the original on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. 2.0 2.1 Buyers, Christopher (2002). "Genealogy of the Noble House of Karangasem". ©2017. Puri Agung Karangasem website. Archived from the original on 15 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Vickers, Adrian (16 September 2007). "Farewell Dr Djelantik". Adrian Vickers' Indonesia Blog, School of Languages and Cultures, The University of Sydney, Australia. Archived from the original on 31 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017.
  4. 4.0 4.1 Bali Now! / Life in the Island (9 June 2016). "Water Palaces in the Age of Rajas". Copyright 2015. Phoenix Communication.
  5. 5.0 5.1 Harsianti, Juliana (29 January 2016). "NuArt Lab: Making Bandung an art collaboration center". The Jakarta Post. பார்க்கப்பட்ட நாள் 31 October 2016.
  6. https://aijgeneva.com/2013/06/10/introduction-to-bali-dance-by-biang-bulantrisna-djelantik/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலந்திரிசனா_ஜெலந்திக்&oldid=3768976" இலிருந்து மீள்விக்கப்பட்டது