புறவூதா வானியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறஊதா வானியல் அண்ணளவாக 100 - 3200 Å (10 - 320 nm) அலைநீளம் கொண்ட கதிர்களை கண்டறிந்து கூர்ந்தாய்வது பற்றியது [1] . இத்தகைய அலைநீளங்களில் அமைந்த கதிர்களை வளிமண்டலம் உறிஞ்சி விடுவதனால் இவற்றுக்கான நோக்கங்கள் மேல் வளிமண்டலத்தில் அல்லது விண்வெளியிலேயே இருக்கவேண்டும். புறஊதா வானியல், வெப்பக் கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்வதற்கும், இந்த அலைநீளத்தில் பிரகாசமாகத் தெரியும் சூடான நீல விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை ஆராய்வதற்கும் மிகவும் உகந்தது. இது, பல புறஊதாக் கதிர் ஆய்வுகளுக்கு உட்படுகின்ற பிற விண்மீன் பேரடைகளில் இருக்கும் நீல விண் மீன்களையும் உள்ளடக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cox, A. N., தொகுப்பாசிரியர் (2000). Allen's Astrophysical Quantities. New York: Springer-Verlag. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-387-98746-0. http://books.google.com/?id=w8PK2XFLLH8C&pg=PA124. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறவூதா_வானியல்&oldid=2220911" இருந்து மீள்விக்கப்பட்டது