புறப்பாடு (தன்வரலாறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறப்பாடு என்பது ஜெயமோகன் எழுதிய தன்வரலாற்று நூல் ஆகும். இந்நூலில் அவர் தன் பத்தொன்பதாவது வயதில் முதல்முறையாக வீட்டைவிட்டுக் கிளம்பியதையும் பின்னர் மீண்டும் சில மாதங்கள் கழித்து வீட்டைவிட்டுக் கிளம்பி இந்தியாவெங்கும் அலைந்ததையும் விவரிக்கிறார். அவ்விரு பயணங்களுமே புறப்பாடு எனப்படுகின்றன. இந்நூல் நற்றிணைப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது

அமைப்பு[தொகு]

புறப்பாடு இரு பகுதிகளைக் கொண்டது. முதல்பகுதியில் வீட்டைவிட்டுக் கிளம்பும் ஜெயமோகன் தலித் மாணவர்களுக்கான விடுதியில் அவர்களுடன் தங்கியிருந்ததை விவரிக்கிறார். அவர்களின் நட்பு, உழைப்பு ஆகியவற்றை சித்தரிக்கிறார். இரண்டாம்பகுதியில் அவர் சென்னை காசி ஹரித்வார் பூனா போன்ற ஊர்களில் நாடோடியாக அலைந்த வாழ்க்கையின் சித்திரங்கள் உள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறப்பாடு_(தன்வரலாறு)&oldid=3640957" இலிருந்து மீள்விக்கப்பட்டது