புறணி விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு மின் கடத்தியில், நேர்மின்னோட்டம் நடக்கும் பொழுது, அக்கடத்தியின் உள்ளே, அதன் குறுக்கு வெட்டுப் பரப்பில், எல்லா இடங்களிலும், ஒரே சீராக ஒரே அளவு மின்னோட்டம் தான் இருக்கும். ஆனால், மின்னோட்டம் மாறு மின்னோட்டமாக இருந்தால், மிக அதிக அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் நிகழும் பொழுது, மின்னோட்டம் பெரும்பாலும் அந்த மின் கடத்தியின் மேற்புறத்திலேயே நிகழும்; கடத்தியின் அச்சு போன்ற உட்பகுதியில், அதிக மின்னோட்டம் இராது. இப்படி ஒரு கடத்தியின் (அச்சு போன்ற) உட்பகுதியிலே மின்னோட்டம் நிகழாது, புறப்பகுதியில் அதிகமாக மின்னொட்டம் நிகழ்வதை புறணி விளைவு (skin effect) என அழைக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறணி_விளைவு&oldid=2740436" இருந்து மீள்விக்கப்பட்டது