உள்ளடக்கத்துக்குச் செல்

புரூக்ளின் ஒன்பது-ஒன்பது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரூக்ளின் ஒன்பது-ஒன்பது ஒரு அமெரிக்க காவல்துறை நடைமுறை, சூழ்நிலை நகைச்சுவைத் தொடர் ஆகும். இத்தொடர் செப்டம்பர் 17, 2013 அன்று முதன்முதலாக திரையிடப்பட்டது மற்றும் செப்டம்பர் 16, 2021 அன்று தொடரின் இறுதி நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

புரூக்ளின் ஒன்பது-ஒன்பது
வகை
உருவாக்கம்
 • டான் கூர்
 • மைக்கல் ஷுர்
நடிப்பு
முகப்பு இசைடான் மரோக்கோ
இடம்பெறுவோர்
 • ஜாக்கெஸ் சிலேட்
 • லமார் வான் ஸ்கிவர்
 • பிராங்க் கிரீன்பீல்ட்
பிண்ணனி இசைடான் மரோக்கோ
நாடுஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்
மொழிஆங்கிலம்
பருவங்கள்8
அத்தியாயங்கள்143
தயாரிப்பு
படவி அமைப்புஒற்றைப் படக்கருவி
ஓட்டம்21–23 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
 • பிரெமியுளான்
 • டான் கூர் தயாரிப்புகள்
 • 3 ஆர்ட்ஸ் கேளிக்கை
 • யூனிவெர்சல்
விநியோகம்என்.பி.சி.
ஒளிபரப்பு
அலைவரிசை
 • பாக்ஸ் தொலைக்காட்சி (பருவங்கள் 1–5)
 • என்.பி.சி. (பருவங்கள் 6–8)
படவடிவம்HDTV மற்றும் 1080i
ஒலிவடிவம்டால்பி டிஜிட்டல் 5.1
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 17, 2013 (2013-09-17) –
தற்போது (தற்போது)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இத்தொடர், புரூக்ளினின் கற்பனையான 99 வது பிராந்தியத்தில் நியூயார்க்கு நகர காவல் துறையை (NYPD) சேர்ந்த துப்பறிவாளர் ஜேக் பெரால்டாவை (ஆண்டி சம்பெர்க்) சுற்றி வருகிறது, அவர் அடிக்கடி தனது உயரதிகாரியான கேப்டன் ரேமண்ட் ஹோல்ட் உடன் மோதலில் ஈடுபடுகிறார்.

புரூக்ளின் ஒன்பது-ஒன்பது, நகைச்சுவை உணர்வைத் தக்கவைத்துக்கொண்டு, தீவிரமான பிரச்சினைகளை சித்தரிப்பதற்காக விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. இதன் முதல் பருவம் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது. மேலும் ஆண்டி சாம்பெர்க் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார். ஒரு நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான பிரைம் டைம் எம்மி விருதுக்கு பிரௌகர் நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டார். மற்றும் ஒரு நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான விமர்சகர்களின் தேர்வு தொலைக்காட்சி விருதை இரண்டு முறை வென்றுள்ளார். ந.ந.ஈ.தி. மக்களை சித்தரிப்பதற்காக, இந்தத் தொடர் சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான GLAAD ஊடக விருதை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]