புரி கந்தக் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரி கந்தக் நதி கங்கையின் ஒரு துணை நதியாகும். புரி கந்தக் நதி பீகாரிலுள்ள மேற்கு சம்பரன் மாவட்டத்தில் பிஸ்ம்பர்பூர் அருகே உள்ள சதுர்வா சாரில் இருந்து உருவாகிறது. இது ஆரம்பத்தில் கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் வழியாக பாய்கிறது. சுமார் 56 கிலோமீட்டர் (35 மைல்) தொலைவில் பாய்ந்த பிறகு, நதியானது தென்கிழக்காக பாய்ந்து, அங்கு இரண்டு ஆறுகள் - துபரா மற்றும் டூர் இணைக்கின்றது. அதன்பின், முசாபர்பூர் மாவட்டத்தின் வழியாக தென்கிழக்கு திசையில் ஆற்றின் ஓட்டம் 32 கிலோமீட்டர் (20 மைல்).சமஸ்திபூர் மற்றும் பேகுசராய் மாவட்டங்களின் வழியாக ஏற்ற இறக்கமாக பாய்ந்த பிறகு காகரியா மாவட்டத்திற்குள் நுழைகிறது.. [1][2] இது காகரியா நகரத்தின் மேற்கு எல்லையாக இருக்கிறது. இந்நதி வெள்ளத்தில் இருந்து காகாரியா நகரத்தை பாதுகாக்கிறது.இறுதியில் கங்கையில் சேர்கிறது

ஆற்றின் நீளம்[தொகு]

ஆற்றின் மொத்த நீளம் 320 கிலோமீட்டர் (200 மைல்) ஆகும். ஆற்றின் வடிகால் பகுதி 10,150 சதுர கிலோமீட்டர் ஆகும்.

துணை ஆறுகள்[தொகு]

மன்யன், பாலோர், பாண்டாய், சிக்தா, திலாவே, தியூர், தனுவுடி, கோஹரா, அஞ்சன்கோட் மற்றும் டான்டா ஆகியவற்றின் முக்கிய கிளைகளாகும்.

மேற்காேள்கள்[தொகு]

  1. "Samastipur district". District administration. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  2. "Begusarai district". District administration. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரி_கந்தக்_நதி&oldid=3597135" இலிருந்து மீள்விக்கப்பட்டது