உள்ளடக்கத்துக்குச் செல்

புனேசுவர் மகாதேவ் மந்திர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனேசுவர் மகாதேவ் மந்திர் (Punyeshwar Mahadev Mandir)[1] இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் முத்தா நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். புனேசுவருடன் நாராயணேசுவர் என்ற மற்றொரு கோயிலும் இருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனேசுவர் கோவில் இடிக்கப்பட்டது.[2] தற்போது தக்தா (இளைய) சேக் சல்லா தர்கா என்ற பெயரில் ஒரு தர்காவாக மாற்றப்பட்டுள்ளது. இன்றுவரை கோயில் அதன் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து வருகிறது.[3] அதே நேரத்தில் நாராயணேசுவர் மூத்த சேக் சல்லா தர்காவாக மாற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், ஆற்றின் குறுக்கே ஒரு சுவர் இடிந்து தர்காவின் கீழ் புனேசுவர் கோவிலின் பழமையான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

புனே நகரில் உள்ள பாடலேசுவரருக்குப் பிறகு, இந்த கோயில் அதன் அசல் வடிவத்தில் இல்லை என்றாலும், ஆரம்பகால பெயரிடப்பட்ட கோயில்களில் ஒன்றாக உள்ளது.

புனே நகரம் புனேசுவர் கோயிலின் பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Diddee and Gupta (2000). Pune Queen of the Deccan. Pune: Elephant Design Pvt. Ltd. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87693-00-2.
  2. Parasnis DB (1921). Poona in bygone days. Pune: The Times Press, Bombay. p. 77.
  3. Avinash Sowani (1998). Haravalele Pune (in Marathi) (First ed.). Pune: Purva Prakashan. p. 20.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)