புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, துாத்துக்குடி | |
---|---|
தகவல் | |
வகை | சேசு, கத்தோலிக் |
மதப்பிரிவு | All faiths |
தொடக்கம் | 1884 |
தலைமை ஆசிரியர் | எம்.ஏ. இஞ்ஞாசி, SJ |
பால் | இருபாலர் |
இணையம் | SFXThoothukudi |
தூத்துக்குடி புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி (St. Xavier's Higher Secondary School, Thoothukudi) மதுரை மாகாண சேசு சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி 1884 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] இப்பள்ளியின் பெயரானது சேசு திருச்சபையைச் சேர்ந்த சமயப்பரப்பாளர் புனித பிரான்சிசு சேவியர் என்பவரின் இந்திய வருகையை நினைவுபடுத்தும் விதத்தில் இடப்பட்டது. இந்தப் பள்ளி தூத்துக்குடியின் ஆங்கில உச்சரிப்புப் பெயரான டூட்டிகொரின் என்ற பெயருடன் சேர்த்தும் அடையாளப்படுத்தப்படுகிறது.
வரலாறு
[தொகு]1920 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியானது பெரும்பான்மையான கத்தோலிக்க மாணவர்களை உள்ளடக்கி 563 மாணவர்களுடன் செயல்பட்டது.[2] இது அந்தக் காலகட்டத்தில் மற்ற கத்தோலிக்கப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது ஒரு மாறுபட்ட நிலையாகும்.[3] துாத்துக்குடியில் உள்ள சேவியர் நிறுவனமானது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின்படி 1960 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.[4] இந்தப் பள்ளி செயல்பாடு மிக்க ஒரு பழைய மாணவர் சங்கத்தைக் கொண்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Highlights (1982-1991) - Jesuit Madurai Province". Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-21.
- ↑ Campbell, Thomas J. (2014-02-01). The Jesuits, 1534-1921: A History of the Society of Jesus from its Foundation to the Present Time (in ஆங்கிலம்). The Floating Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781776530991.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - ↑ Behera, Marina Ngursangzeli (2011-12-05). Interfaith Relations after One Hundred Years: Christian Mission among Other Faiths (in ஆங்கிலம்). Wipf and Stock Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610979108.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - ↑ "St.Francis Xavier's Higher Secondary School" (in ஆங்கிலம்). Archived from the original on 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2017-01-20.
- ↑ "Import consolidation services,air import consolidation services,India,import consolidation service provider,service providers". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-20.