உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தியல் ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dejeuner sur l'Herbe by Pablo Picasso
At the Moulin Rouge: Two Women Waltzing by Henri de Toulouse-Lautrec, 1892

புத்தியல் ஓவியம் (Modern art) அல்லது நவீன ஓவியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1970 ஆம் ஆண்டுவரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் ஆகும். புத்தியல் ஓவியம், அக்காலத்திய ஓவியம் தொடர்பான புதிய அணுகுமுறையைக் குறித்தது. இந்த அணுகுமுறையில், பொருட்கள், அவை இருப்பது போன்றே வரையப்பட வேண்டும் என்பதில்லை. நிழற்படத் தொழில் நுட்பத்தில் தோற்றம், ஓவியத்துக்கு இருந்த அந்தத் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதனால் கலைஞர்கள், இயற்கை, பொருட்கள், கலையின் செயற்பாடுகள், ஆகியவை தொடர்பாகப் புதிய சிந்தனைகளுடன், கலையை நோக்குவதற்கான புதிய முறைகள் பற்றிய சோதனைகளில் ஈடுபட்டார்கள். இது, கலையைப் பண்பியற் தன்மைக்கு (abstraction) நெருக்கமாகக் கொண்டு வந்தது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lubow, Arthur (2003-07-27). "The Secret of the Black Paintings" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2003/07/27/magazine/the-secret-of-the-black-paintings.html. 
  2. Danto, Arthur C. (2004-03-01). "FRANCISCO DE GOYA". Artforum (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-28.
  3. "The unflinching eye" (in en-GB). The Guardian. 2003-10-04. https://www.theguardian.com/artanddesign/2003/oct/04/art.biography. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தியல்_ஓவியம்&oldid=4100911" இலிருந்து மீள்விக்கப்பட்டது