புத்ததத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புத்ததத்தர் என்பவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்[1] உறையூரில் வாழ்ந்த ஒரு தமிழறிஞர். இவர் பௌத்த சமயத்தைச் சேர்நதவர். களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் எனும் மன்னனின் காலத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. தமிழரான இவர் பாலி மொழியில் அபிதம்மாவதாரம்[2] என்னும் நூலையும் ‘விநய விநிச்சயம்’ எனும் நூலையும் எழுதியிருக்கிறார். இது மட்டுமின்றி பாலி மொழி நூல்களுக்கு இவர் பாலி மொழியிலேயே உரைகளும் எழுதி உள்ளார். இவர் புத்த சமயத்தை மேற்கொண்டு வாழ்ந்த ஒரு தமிழர். சோழநாட்டு உறையூரில் பிறந்த இவர் காவிரிபூம்பட்டினம், பூதமங்கலம், காஞ்சிபுரம், ஸ்ரீலங்காவில் அநுராதபுரம் முதலிய இடங்களிலுள்ள புத்த விகாரங்களில் இருந்துள்ளார். களப்பிரர் ஆட்சியில் தமிழகம் பற்றி அறிய உதவும் சான்றுகளில் புத்ததத்தர் நூல்களும் உறுதுணையாக உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ததத்தர்&oldid=2716869" இருந்து மீள்விக்கப்பட்டது