புதிய ஆத்திசூடி
Appearance
புதிய ஆத்திசூடி ஒரு தமிழ் நீதி நூல். ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியைப் போன்றே நல்ல அறிவுரைகளுடன் சுப்பிரமணிய பாரதியாரால் 20-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆத்திசூடியைப் போன்றே இதன் அமைப்பு உள்ளது. மொத்தம் 111 அறிவுரைகள் உள்ளன. இவை எளிதில் மனப்பாடம் செய்து கொள்ளும் சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்துள்ளன.