புண்ணிய பூமியில் புனிதப் பயணம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம்[1]
நூலாசிரியர்"ஜோதிட சக்கரவர்த்தி" ஏ.எம்.ராஜகோபாலன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகோயில்கள்,ஆன்மிகம், பயணக்கட்டுரை
வெளியீட்டாளர்கோயம்புத்தூர் ஸ்ரீராகவேந்திரர் பப்ளிகேஷன்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
15.04.2011

புண்ணிய பூமியில் புனிதப் பயணம் நூல், குமுதம் ஜோதிடம் வார இதழில் வெளிவந்த, இதழ் ஆசிரியரின் (ஏ.எம்.ராஜகோபாலன்) இமய மலைப் பயணக் குறிப்பு, வரலாறுகள் கொண்ட ’புண்ணிய பூமியில் புனிதப் பயணம்’ கட்டுரையின் தொகுப்பு நூல். இந்நூல் 15.04.2011 வெள்ளிக்கிழமையன்று தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் வெளியிடப்பட்டது.இந்நூலை வெளியிட்ட பதிப்பகம் கோயம்புத்தூர் ஸ்ரீராகவேந்திரர் பப்ளிகேஷன்ஸ்.

இமயமலையின் ஆன்மிகப் பயணநூலாகவும், இமயம், மானசரோவர், மகா பிரயாகைகள், இமயத்திலுள்ள பல புண்ணிய தலங்கள், புனிதத் தீர்த்தங்கள், முனிவர்கள் தவம்புரிந்த தலங்கள் ஆகியவற்றின் விரிவான வரலாற்றைத் ஆதாரங்கள் திரட்டி எழதப்பட்ட வரலாற்று நூலாகவும் அறியப்படுகின்றது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. குமுதம் ஜோதிடம்; 28.05.2010
  2. குமுதம் ஜோதிடம்; 6.5.2011; பக்கம் 1,2